பிஎஸ்எம்: டிபிபிஏ வந்தால் தொழிலாளர் உரிமை மேலும் பறிபோகலாம்

tppaபுத்ரா ஜெயா,  1959ஆம்  ஆண்டு தொழிற்சங்க  சட்டம்    பசிபிக் வட்டார பங்காளித்துவ  உடன்பாட்டுக்கு (டிபிபிஏ)  இசைவாக இருக்க  வேண்டும்  என்பதற்காகவே  அதில்  திருத்தங்கள்  கொண்டு   வர  முனைந்துள்ளது  என்று  பார்டி  சோசலிஸ்  மலேசியா(பிஎஸ்எம்)  எச்சரித்துள்ளது.

ஏற்கனவே,  1959 தொழிற்சங்கச்  சட்டம் தொழிலாளர்களின்  அடிப்படை  உரிமைகளான  தொழிற்சங்கம்  அமைத்தல்,  கூட்டாக  பேரம்  பேசுதல்,  வேலைநிறுத்தம்  செய்தல்  முதலியவற்றை  நிலைநிறுத்த  முடியாமல்  நீர்த்துப்  போய்க்  கிடப்பதாக  அது  கூறிற்று.

“டிபிபிஏ  உடன்பாட்டில்  கையொப்பமிட்டால்  நேரடி  முதலீடுகளைக்  கொண்டுவரும்  முதலீட்டாளர்களையும்  நிறுவனங்களையும்  திருப்திப்படுத்துவதற்காக  தொழிற்சங்க  சட்டமும்  1967  தொழில் உறவுச் சட்டமும்  மேலும்  திருத்தப்பட்டு மிச்சம்மீதியுள்ள  உரிமைகளும் பறிபோகலாம்  என  பிஎஸ்எம்  கவலையுறுகிறது”,  என்று  பிஎஸ்எம் தேசிய  பொருளாளர் ஏ.சிவராஜன்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.