தன்னார்வக் காவல் படையினர்(பிபிஎஸ்) 157 பேர்மீது அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடர சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகத்தின் கட்டளைக்காகக் காத்திருப்பதாக பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரகிம் ஹனாபி கூறினார்.
ஆகஸ்ட் 31-இல், கைதுசெய்யப்பட்ட அவர்கள் மீதான விசாரணை முடிந்து விசாரணை அறிக்கை ஏஜி-இடம் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
அப்படையினருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பிணை டிசம்பர் 1-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பிணை நீட்டிக்கப்பட்டிருப்பது பிபிஎஸ் படையினர்மீது குற்றம்சாட்ட போலிசிடம் ஆதாரம் எதுவுமில்லை என்பதைக் காண்பிப்பதாகக் கூறியிருப்பதற்கு எதிர்வினையாக அப்துல் ரகிம் இவ்வாறு கூறினார்.
வாழ்க ஜனநாயகம், பாவம் மக்கள்.
ஒரு தீவுக்காக சீனன் போராடுகிறான்..இதில் மறைமுகமான தீவிரவாத குண்டர் கும்பலை ஏவி விடுகிறான்.