அஸ்மின், ஃபாட்வாவை எதிர்ப்பது எங்களது உரிமை

 

sisters1சிலாங்கூர் இஸ்லாமிய விவகார மன்றம் சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம் (எஸ்ஐஎஸ்) என்ற அமைப்புக்கு எதிராக விடுத்திருந்த ஃபாட்வாவை எதிர்ப்பது தங்களுடைய உரிமை என்று அந்த அமைப்பு கூறுகிறது.

சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய எஸ்ஐஎஸின் திட்ட நிருவாகி சூரி கெம்பெ தங்களுடைய அமைப்பின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படாதிருக்கையில் அது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார்,

“அரசமைப்புச் சட்டப்படி எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவதை எதிர்க்கும் சட்ட உரிமை எங்களுக்கு உண்டு”, என்று அவர் கூறினார்.

“தாராண்மைவாதம் மற்றும் பன்மைவாதம்” ஆகியவற்றை பரப்புகிறது என்பதற்காக அந்த அமைப்பை தடை செய்துள்ள ஃபாட்வா மதிக்கப்பட வேண்டும் என்று அஸ்மின் கூறியிருப்பதின் அர்த்தம் என்ன என்பதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று சூரி கூறினார்,

ஃபாட்வாவை மதிக்க வேண்டும் என்பதின் அர்த்தம்தான் என்ன என்று தொடர்பு கொண்டபோது அவர் கேட்டார்.

“அநேகமாக, தாராண்மைவாதம் மற்றும் பன்மைவாதம் ஆகியவை பற்றி அவர் எங்களுக்கு அறிவூட்டலாம்”, என்று ஒரு டெலக்ஸ் செய்தியில்sisters2 அவர் இன்று தெரிவித்தார்.

4,000க்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு எஸ்ஐஎஸ் அளித்து வரும் சட்ட உதவிகள் மற்றும் பயிற்சிகள் “தாராண்மைவாதம் மற்றும் பன்மைவாதம்” ஆகியவற்றை உண்டாக்குகிறது. ஆகவே எஸ்ஐஎஸ் பொதுநிலையிலிருந்து மாறுபட்டுச் செல்கிறதா என்று அவர் வினவினார்.

கடந்த ஜூலையில், எஸ்ஐஎஸ் அதற்கு எதிராக விதிக்கப்பட்டு மற்றும் அரசு ஏட்டில் பதிவு செய்யப்படுள்ள ஃபாட்வாவுக்கு எதிராக நீதி விசாரணைக்கு மனு தாக்கல் செய்துள்ளது.

விதிக்கப்பட்டுள்ள தடைகளில், எஸ்ஐஎஸ் எதனையும் பிரசுரிக்கக்கூடாது, ஓன்லைன் உட்பட, என்பதும் அடங்கும்.

எஸ்ஐஎஸ் அதன் நீதி விசாரணைக்கான மனுவில்  ஃபாட்வா மன்றம், மைஸ் மற்றும் சிலாங்கூர் மாநில அரசு ஆகியவற்றை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளது.