தேர்தல் ஆணையம் (இசி) புதிய தேர்தல் தொகுதிகளை முடிவு செய்ததும் அந்தந்த தொகுதிகளில் அவற்றைக் காட்சிக்கு வைக்கும். அவற்றைப் பார்த்து பொதுமக்கள் தங்கள் தொகுதிகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
தொகுதிகள் பற்றிக் கருத்துத் தெரிவிக்க விரும்வோர் அப்போது அவற்றைப் படம் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், புதிய தொகுதிகள் அங்கீகரிக்கப்பட்டு அரச இதழில் வெளியிடப்படும்வரை அவற்றைப் பொதுமக்கள் விலைக்கு வாங்க முடியாது என இசி கூறியிருப்பதாக திண்டாக் மலேசியா என்ஜிஓ-வின் நிறுவனர் வோங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
வாக்காளர்கள் தங்கள் தொகுதிகளில் மட்டுமல்லாமல் மாநிலத்தின் மற்ற தொகுதிகளிலும் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அறிந்திருப்பது அவசியம் என்றாரவர்.
“ஒரு தொகுதியை அடுத்த தொகுதியுடன் பிறகு இன்னொரு தொகுதியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்”, என வோங் கூறினார்.
அதற்கு அவற்றைப் படம்பிடித்து வைத்திருப்பது அவசியமாகும்.
அரசமைப்பு, மற்றவற்றோடு “ஒரு மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் எண்ணிக்கை ஏறத்தாழ சமமாக இருக்க வேண்டும்”, எனக் கூறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஐயா! வரைப்படங்கள் எங்கும் வாங்கத் தேவையில்லை. பொது இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும் நாளன்று, எல்லா தினசரிகளிலும் [தமிழ்ப் பத்திரிக்கைகள் தவிர்த்து] வெளியாகும். அதை வெட்டி வைத்துக் கொள்ளலாமே! அப்படி செய்ததினால், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்து,சென்ற முறை சீரமப்புவரை அனைத்தையும் நான் வைத்துள்ளேன்.