எம்பிகள் நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு சம்பளமும் மற்ற ஊதியங்களும் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
2009-இல் ஒராண்டுக் காலம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தபோது தமக்குச் சம்பளம் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்திருந்தார்.
கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற கோபிந்த், தமக்கு முன்னர் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிகளுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பளப் பணத்தை நாடாளுமன்றம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
“இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் எம்பி-க்குரிய கடமைகளைச் செய்யத்தான் வேண்டியிருக்கும்.
“முழுநேர அரசியல்வாதிகளாகவுள்ள சில எம்பிகளும் அவர்களின் குடும்பங்களும் சம்பளத்தைத்தான் நம்பி உள்ளன” என்றாரவர்.
நல்ல முடிவு . நீதியின் வெற்றி !