பிள்ளை பராமரிப்பு விவகாரத்திலிருந்து நழுவுகிறது அரசாங்கம்

jamilகுழந்தை  பராமரிப்பு  உள்பட, வெவ்வேறு  சமயத்தவர்  சம்பந்தப்பட்ட  திருமணப்  பிரச்னைகள்  மாநில  அளவில்  தீர்த்துக்கொள்ளப்பட  வேண்டியவை என்கிறார்  பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்  பஹாரோம்.  ஏனென்றால், ஷரியா  நீதிமன்றமும்  இஸ்லாமிய  விவகாரங்களும்  மாநில  அரசுகளின்  அதிகாரத்துக்கு  உட்பட்டவை.

“அவற்றைக்  கூட்டரசு  அரசாங்கத்திடம்  கொண்டு  வராதீர்கள். மாநில  அரசுகளுக்கே  திரும்பிச்  சென்று  தேவையான  திருத்தங்களைச்  செய்யுங்கள்”, என ஜமில்  நாடாளுமன்றத்தில்  கூறினார்.

மணம்  செய்துகொண்ட  இருவரில்  ஒருவர் இஸ்லாத்துக்கு  மதம்  மாறிய  கணமே  அவர்  ஷியாரியா  நீதிமன்றத்தின்  அதிகாரத்துக்கு  உட்பட்டவர்  ஆகி  விடுகிறார். சிவில்  நீதிமன்றத்துக்கு  அவர்மீது  அதிகாரம் இல்லாது  போய்  விடுகிறது.