பைபிளை எரிக்கப்போவதாக இப்ராகிம் அலி விடுத்த மிரட்டலைச் சட்டத்துறைத் தலைவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப்-பின் கோரிக்கையை அமைச்சரவை ஏற்கவில்லை என்றால் குருப் பதவி விலகத் தயாரா?
இப்படி ஒரு சவாலை விடுத்துள்ளார் பாஸ் கட்சியின் சிப்பாங் எம்பி ஹனிபா மைடின். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய ஹனிபா, இதுபோன்ற விவகாரத்தில் அமைச்சரவை “ஒரே குரலைத்தான் கொண்டிருக்க வேண்டும்” என்றார்.
இவ்விவகாரத்தில் அரசாங்கம் ஏஜியைக் காரணம்காட்டி மெளனமாக இருப்பதும் சரியல்ல என்றாரவர்.
பிரதமர் துறை அமைச்சர் குருப் கூரிய கருத்துக்கு சிப்பாங் எம்.பி.ஹானிபா மைதீன் { பாஸ் } சொல்வது சரியென்றாலும் உங்க கட்சி என்ன சொல்கிறது..? தவள வாயன் அலி சொல்வதை ஆதரிக்கிறதா..?
சோத்துக்கே உளைவைக்கப்பார்கிறான் Joseph அவர்களே ! இந்த சவாலை எல்லாம் ஏற்கவேண்டாம் ! போராடுங்கள் !
எது வந்தாலும் குரல் கொடுங்க ஜோசப், சுடு சொரணை இல்லாதவன் பேச்சை கேட்காதே