மஇகா: 2020-இல் தேவாலயங்களே இருக்கமாட்டா

1-sivaragமுஸ்லிம்- பெரும்பான்மை  பகுதிகளில்  தேவாலயங்கள்  கட்ட  எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதை  மஇகா  இளைஞர்  தலைவர்  சி.சிவராஜா  கண்டித்துள்ளார். போகும்  போக்கைப்  பார்த்தால்  2020-இல்  முஸ்லிம்- அல்லாதாருக்கு  வழிபாட்டு  இல்லங்களே  இருக்காது  போல்  தெரிகிறது  என்றாரவர்.

முஸ்லிம்களின்  எண்ணிக்கை  பெருகிக்கொண்டே  வருகிறது. 2020-இல்  அது  மலேசிய  மக்கள்  தொகையில்  70  விழுக்காடு  ஆகிவிடும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அந்நிலையில்  கோயில்களோ,  தேவலாயங்களோ, குருத்வாரா-களோ  இருக்கக்  கூடாதா?”, என்று  சிவராஜா  ஓர்  அறிக்கையில்  வினவினார்.

பெட்டாலிங்  ஜெயா  பண்டார்  சன்வே-இல் , என்ஜிஓ-களின்  கூட்டமொன்று  தேவாலயம்  கட்ட  எதிர்ப்புத் தெரிவித்ததற்கு  எதிர்வினையாக அவர்  இவ்வாறு  கூறினார்.