பிகேஆர்: அன்வார் சிறைக்கு அனுப்பப்பட்டால் மக்கள் பொங்கி எழுவர்

tianபிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  குதப்புணர்ச்சி  வழக்கில்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டால்  ஆர்ப்பாட்டங்கள்  நடப்பது  உறுதி  என்று  அதன்  உதவித்  தலைவர்  தியான்  சுவா  எச்சரிக்கிறார்.

நீதி  மாளிகைக்கு  வெளியில்  500  பேருக்கு  மேற்பட்ட  ஆதரவாளர்களிடையே  பேசிய  தியான்  சுவா, கோலாலும்பூரில்  வார  இறுதியில்  ஆதரவாளர்கள்  ஒன்றுதிரட்டப்படுவர்  என்றார்.

“அன்வார்  தண்டிக்கப்பட்டால்  வார  இறுதியில்  டாட்டாரான்  மெர்டேகாவில்  ஒன்று  திரள்வோம்.

“அது  மக்கள்  எழுச்சியின்  அடையாளமாகும்.  எதிரணித்  தலைவரின்  பாதுகாப்புக்காக  உருவாகும்  புதிய  அலையாகும்”, என்றவர்  முழங்கினார்.

கூட்டத்தினர்  பதிலுக்கு “ரிபோர்மாசி”  எனப்  பெருங்  குரலில்  கூவினர்.