மைக்கி: அட்னான் ஆசிரமத்தைக் காக்க வேண்டும்

maicciகூட்டரசு பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்,  பிரிக்பீல்ட்சில்  வரலாற்றுச்  சிறப்புமிக்க  சுவாமி  விவேகாநந்தா  ஆசிரம்  அமைந்துள்ள  பகுதியில்  மேற்கொள்ளப்படவுள்ள  மறு-மேம்பாட்டுத்  திட்டத்தில்  தலையிட  வேண்டும்.

இவ்வாறு கேட்டுக்கொண்ட  மலேசிய  இந்திய  வர்த்தக, தொழிலியல்  சங்கக்  கூட்டமைப்பு (மைக்கி)  தலைவர்  கே.கே. ஈஸ்வரன், தெங்கு  அட்னான்  மேம்பாட்டுப்  பணிகளைத்  தடுத்து  நிறுத்தி  அவ்விவகாரம்   மீது  விசாரணைக்கு  உத்தரவிட  வேண்டும்  என்றார்.

ஆசிரமம்  நிதிப் பிரச்னைகளை  எதிர்நோக்கினால்,  அந்த  இடத்தை  மறுமேம்பாடு  செய்வதை  விடுத்து,  வேறு  வழிகளில்தான்  அதற்குத்  தீர்வுகாண   முயல வேண்டும்  என்று  ஈஸ்வரன்  கூறினார்.

1904-இல்  கட்டப்பட்ட  சுவாமி  விவேகானந்தா  ஆசிரமம்  அமைந்துள்ள  இடத்தில்  23-மாடி  அடுக்குமாடிக்  கட்டிடமும்  எட்டு  அடுக்கு  கார்  நிறுத்துமிடமும்  கட்டத்  திட்டமிடப்பட்டிருப்பதாக  தெரிகிறது. ஆனால்,  அதை  ஒரு  வரலாற்றுச்  சின்னமாக  போற்றும்  இந்திய  சமூகம்  அதற்குக்  கடும்  எதிர்ப்புத்  தெரிவித்துள்ளது.