நஸ்ரி: விவேகானந்தா ஆசிரமம் பாதுகாக்கப்பட வேண்டும்

 

Vivekenanda Ashram1கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்திருக்கும் 110 ஆண்டுகால விவேகனந்தா ஆசிரமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சுற்றுப்பயணம் மற்றும் கலாச்சார துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் அந்த ஆசிரமத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பேசுகையில் கூறினார்.

ஆசிரமம் அமைந்துள்ள அந்நிலம் மேம்படுத்தப்படுவதை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைத் தொடருமாறு அவர் அதில் ஈடுபட்டுள்ளவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

 

எதிர்ப்பவர்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர்கள்

 

nazriஆசிரமம் அமைந்திருக்கும் நிலத்துக்குச் சொந்தக்காரர்கள்தான் ஆசிரமத்தை ஒரு தேசிய பாரம்பரிய சொத்தாக அரசு ஏட்டில் பதிவு செய்யப்படுவதற்காக முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் நஸ்ரி மேலும் கூறினார்.

“இது நடப்பதைக் காண்பது எனக்கு வருத்தமளிக்கிறது. நாம் பல பாரம்பரிய கட்டடங்களை இழந்து விட்டோம். போதும், kulaஇனிமேலும் வேண்டாம்.

“நாங்கள் எப்போதுமே அதை அரசு ஏட்டில் பதிவு செய்ய விரும்பினோம். ஆனால், உரிமையாளர்கள் மறுத்து விட்டனர்”, என்றாரவர்.

டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் தம்மை அந்த ஆசிரமத்திற்கு வருகை அளிக்க வேண்டும் என்று கூறியிருந்த ஆலோசனையை தாம் ஏற்றுக்கொள்வதாக நஸ்ரி தெரிவித்தார்.

 

அமைச்சர் வருகிறார்!

 

அமைச்சர் நஸ்ரி நாளை பிற்பகல் மணி 4.30 அளவில் விவேகனந்தா ஆசிரமத்திற்கு வருகையளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.