கனிமநீர் போத்தலில் ஒட்டப்பட்டிருக்கும் ஹலால் சின்னத்திற்கு அடுத்து ஒட்டப்பட்டுள்ள ஓர் இந்து தெய்வத்தின் படம் “வழிபாட்டு கூறுகளை” கொண்டிருக்கலாம் என்று மலேசிய பயனீட்டாளர்கள் சங்கம் (பிபிஐஎம்) கூறுகிறது.
அம்மாதிரியான போத்தல்களை தயாரிப்பதற்கு அவற்றை தயாரித்த சுவான் சின் செண்ட். பெர்ஹாட்டிற்கு “தீய நோக்கம்” இருக்கலாம் என்று பிபிஐஎம்மின் தலைமை ஆர்வலர் நாட்ஸிம் ஜோஹான் கூறினார்.
நேற்று, இது குறித்து தமக்கு கிடைத்த புகார் ஒன்றில் அந்த கனிமநீர் போத்தலில் இந்து தெய்வமான முருக பெருமானின் படம் ஹலால் சின்னத்திற்கு பக்கத்தில் ஒட்டப்பட்டிருந்தது என்று கூறப்பட்டிருந்தது என்று நாட்ஸிம் மேலும் கூறினார்.
ஆகவே, பிபிஐஎம் இவ்விவகாரம் குறித்து நாளை போலீஸ் புகார் ஒன்றை செய்யும் என்றார்.
ஹலால் சான்று வழங்கும் ஜாகிம் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதைதான் நாங்கள் ‘திருநீர்” என்போம் !
என்னடா புதுசு புதுசா கத உடரிங்க இந்து கடவுளுனா அவளவு கேவலமா ?
வேலை வெட்டியில்லாதவன்
நீங்கள் அன்றாடம் சொல்லும் வார்த்தைகளான, பழனிவேல், சுப்ரமணியம், சரவணன், கமலநாதன் அனைத்துமே சமய வழிபாட்டு கூறுகளைக் கொண்டவையே. முடிந்தால் இவர்கள் மீதும் போலீசில் புகார் செய்யுங்கள் பார்ப்போம்?. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்றாகி விடும். மலேசியா, மலேசியாவாக இருக்காது வேறோன்றாகி விடும்.
டேய் மட்டி பையல்களே ,,,,சீனங்க்கிட்தான் வாங்கிசாபிடரிங்க காய்கறி,மீன் ,கோழி,பண்டியும் ,பக்கத்தில் இருக்கு ,,அப்பலாம் ஆளால் இல்லை ,,,,புதுசா நடிகாதைகடா,,,அந்த எழுத்து படம் என்னடா உங்கள பண்ணுது ,,,,
மதம் தலை தூக்கின் மனிதம் அழிந்து விடும்(இதற்கு எல்லா காலமும் நடந்த சம்பவமும் நிரந்தர ஆதாரம் )… மதம் துறப்போம்..மனிதம் வளர்ப்போம்/மரமும் வளர்ப்போம் … அன்பே சிவம் …
இந்நாட்டில் அறிவிலித்தனம் கொடி கட்டிப்பறக்கிறது. நாம் எது சொன்னாலும் ஏறாது.இதை வைத்துதான் பிழைப்பு நடத்தவேண்டி இருக்கிறது இந்த…. வேறு என்ன சொல்ல?
முதலில் நாம் தெய்வம் படம் எல்லாம் இன்ந்த மாதிஎலாம் நாம் போடா கூடாது தண்ணீர் குடித்துவித்து குபைதொதில் போடுவர்வர்
எனக்கு என்னமோ தப்பாக தெரியவில்லை ,,தமிழர்கள் வீட்டில் தொங்கி கொண்டு இருக்கும் காலண்டரில் முருகன் படம் ,சரஸ்வதி படம் ,மற்ற மற்ற சாமி படங்கள் நாள் காட்டிகளில் இருக்கின்றன .வருடம் முடிந்த வுடன் அந்த சாமி படம் போட்ட நாள் காட்டிகள் நேராக குப்பை தொட்டியில் போட்டு விடுகிறார்கள் .அதுக்கு இது எவ்வளவோ தேவலாம் .
மோகன் சொல்வது சரிதான், பெரும்பாலான இந்தியர் வீட்டு வாசலில் விநாயகர், காளி, அனுமார், முனிஸ்வரர், படங்கள் தான் மாட்டியிருக்கு, உரெல்லாம் சுத்திடு கண்டதெல்லாம் மிதிச்சிட்டு வீடு வாசலில் மிதியடியை கலட்டி போடறமே, பரவாயில்லையா? சாமி படம் இருக்க வேண்டியிடம் பூஜை அறைதான். சாமி படம் எதில் இல்லை, உதுபத்தி, சூடம், சாம்பிராணி, எண்ணெய் போத்தல், கண்ட கழுதையில்லாம் சாமி படம் இருக்கு. பொருட்களை பாவித்து விட்டு குப்பைக்குதனே போகுது. வீட்டை அலங்கரிகிறோம் என்ற பெயரில் சாமி சிலைகளை கண்ட இடத்தில வைப்பது பரவாயில்லையா?
இந்தக் கபோதிகள் பெரிய கட்டெறும்புகளால் கடியுண்ட கழுதைபோல் கத்துவது ஒரு புறம் இருக்கட்டும். தெய்வம் என்று நாம் நம்பும் படங்களை பயனீட்டாளர் பொருட்களில் அச்சிடுவது, பதிப்பது, ஒட்டுவது சிறிதும் நல்ல செயல் அல்ல என்பது எனது பணிவானக் கருத்து. காரணங்கள் பல. அதில் ஒன்று, தெய்வப்படம் உள்ள அந்தப் பாவித்தப் பொருளை பாவித்தப்பின் குப்பைத் தொட்டியில், சாக்கடையில் வீசுவோம். முடிவில் நாம் போற்றும் தெய்வம் இருக்க அவைதான் ஏற்ற இடமா? இதை பலர் சிந்திப்பது இல்லை. பகுத்து சிந்திப்போம்.
மோகன் சார் நிங்கள் சொல்லுவது சரி நாம் கொஞ்சம் கொஞ்சம் மாற
வேண்டும் காகேண்டர் கல்யாண பத்த்ரிகை எல்லாம் போடகொடதுன்னு சொல்லவேண்டும் சிலர் வேண்டும் என்ரு இந்த மத்திரி செய்வார்கள் உண்மையில் நாம் தான் குரால் கொடுக்கவேண்டும்