போலீஸ்: பிபிஎஸ் உறுப்பினர்கள் சீருடைகளை ஒப்படைக்க வேண்டும்

polisசட்டவிரோதமானதாக  அறிவிக்கப்பட்டுள்ள  தன்னார்வக்  காவல்  படை(பிபிஎஸ்)யின்  உறுப்பினர்கள்  அவர்களின்  சீருடைகளையும்  மற்ற  பொருள்களையும்  சங்கப்  பதிவதிகாரியிடம் ஒப்படைக்க  வேண்டும்  என  போலீஸ்  அறிவுறுத்தியுள்ளது.

உள்துறை  அமைச்சு  சங்கங்கள்  சட்டத்தின் பகுதி 5-இன்கீழ் பிபிஎஸ்  சட்டவிரோதமானது  என  அறிவித்திருப்பதால் “அதை  மதித்து  நடப்பது  நல்லது”  என  மாநில  போலீஸ்  தலைவர்  அப்துல்  ரகிம்  ஹனாபி  கூறினார்.

பிபிஎஸ்  தொடர்பில்  மேல்நடவடிக்கை  எடுப்பதற்குமுன்  புக்கிட்  அமான் கட்டளைக்காகக்   காத்திருப்பதாக  அவர்  சொன்னார்.