அரசாங்கம் என்எப்சி குத்தகையை இரத்துச் செய்யும்

nfcஅரசாங்கம்,  நேசனல்  பீட்லோட் கார்ப்பரேசனு(என்எப்சி)க்குக்  கொடுக்கப்பட்ட  குத்தகையை  இரத்துச்  செய்து  கடனைத்  திருப்பிச்  செலுத்தத்  தவறியதற்காக  அந்நிறுவனத்தின்மீது  சட்ட  நடவடிக்கையும்  எடுக்கும்.

நிதி  அமைச்சு  நாடாளுமன்றத்தில்  அளித்த  எழுத்து  வடிவிலான  பதிலில். என்எப்சி  அரசாங்கம்  அதற்குக்  கொடுத்த ரிம250 மில்லியன்  கடனுக்கு  2014-இல் திருப்பிச் செலுத்த  வேண்டிய  தொகையைச்  செலுத்தத் தவறிவிட்டது  என்றும்   தொடர்ந்து  விடுக்கப்பட்ட  கோரிக்கைகளுக்கும்  பதிலளிக்கவில்லை  என்றும்  கூறியது.

“எனவே, அரசாங்கம் என்எப்சி-யுடன்  செய்துகொண்ட  ஒப்பந்தத்தை  இரத்துச்  செய்து  அதன்மீது  சட்ட  நடவடிக்கையையும்  எடுக்கும்”, என  காலிட்  சமட் (பாஸ்- ஷா ஆலம்)-டுக்கு  அளிக்கப்பட்ட  பதிலில்  கூறப்பட்டிருந்தது.

முந்திய  ஈராண்டுகளில், கடனில்  ரிம34.98 மில்லியனை  மட்டுமே  என்எப்சி  திருப்பிச்  செலுத்தியுள்ளது.