பிஎஸ்எம் பக்கத்தானில் சேராது

psmபல ஆண்டுகள் காத்திருப்புக்கும்  பல  கருத்து  வேறுபாடுகளுக்கும்  பின்னர்,   பக்கத்தான்  ரக்யாட்டில்  சேரும்  எண்ணத்தை  பிஎஸ்எம்  கைவிட்டது.

ஆனாலும்,   ஆளும்  பாரிசான்  நேசனல்  அரசாங்கத்தை வீழ்த்தும்  முயற்சியில்  பக்கத்தானுடன்  சேர்ந்து  பணியாற்ற  அது விருப்பம்  கொண்டிருக்கிறது.

“14வது  பொதுத்  தேர்தலில்  ;பிஎன்னைக்  கவிழ்க்க  பக்கத்தானுடன்  தேர்தல்கூட்டு வைத்துக்கொள்ள பிஎஸ்எம்  தயாராக  உள்ளது”, என அக்கட்சி  ஓர்  அறிக்கையில்  கூறியது.

பார்டி  ரக்யாட்  மலேசியாவுடன்  இணைந்து  இடச்சாரி  கூட்டணி  அமைக்கப்போவதாக கடந்த  வாரம்  அறிவித்திருந்த  பிஎஸ்எம்  இப்போது  இப்படி  ஒரு  முடிவை  எடுத்துள்ளது.

இப்புதிய‘காபோங்கான் கிரி’ கூட்டணி, மலேசிய  அரசியலில்  மூன்றாவது  சக்தியாக  விளங்க  நோக்கம்  கொண்டிருக்கிறது. கிழக்கு  மலேசியாவில்  உள்ள  சமூகவாதிகளையும்  இணைத்துக்கொண்டு  தன்னை  வலுப்படுத்திக்கொள்ள  அது  திட்டமிடுகிறது.