மக்கள் எழுச்சி என்று மிரட்டுவது தேச நிந்தனைக் குற்றமாகும்

pppகுதப்புணர்ச்சி  வழக்கில்  அன்வார் இப்ராகிம்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டால்  தெரு  ஆர்ப்பாட்டங்கள்  நடக்கும்  என  பிகேஆர்  கூறியிருப்பது  பொது  ஒழுங்குக்கு  விடுக்கப்பட்ட  மருட்டல் என  மக்கள்  முற்போக்குக்  கட்சி (பிபிபி) கருதுகிறது.

பிகேஆர்  உதவித்  தலைவர் தியான்  சுவா  அவ்வாறு  கூறியது   “ஒரு  மிரட்டல்”  என்பதுடன்  அரசாங்கத்துக்கு  எதிராக  மக்களைத் “தூண்டிவிடும்  முயற்சியுமாகும்”  என்று  கூறிய  பிபிபி  தகவல்  தலைவர்  ஏ.சந்திரகுமணன்,  அது “தேச நிந்தனைக் குற்றம்” போலவும்  இருக்கிறது  என்றார்.

“அந்த  எம்பி விடுத்துள்ளது  கடுமையான  அறிக்கையாகும். அது  மக்களைத்  தூண்டிவிடுகிறது. அதனால் கலகங்கள் உருவாகலாம்.

“போலீஸ்  அதை  விசாரிக்க  வேண்டும்”, என்றாரவர்.

பத்து  எம்பி ஆன  தியான்  சுவா,  அன்வார்  குற்றவாளி  எனத்  தீர்ப்பானால்  “புதிதாக  மக்கள்  எழுச்சி  ஏற்படும்”  எனக்  கூறியிருந்தார்.