எண்ணெய் விலை மேலும் குறைந்தால் உதவித் தொகைக்கு அவசியமிருக்காது

subஎண்ணெய்  விலை  ஒரு பீப்பாய்க்கு யுஎஸ்$73  என்ற  நிலைக்குக்  குறைந்தால் அதன்  பின்னரும் அரசாங்கம்,  நிதிச் சுமைக்கு  உதவித்  தொகைகள்தான்  காரணம்  எனச்  சொல்லிக்  கொண்டிருக்க  முடியாது.

எண்ணெய்  விலை அந்த  நிலைக்குக்  குறைந்தால்  அரசாங்கம்  உதவித்  தொகை  என்ற  பெயரில்  எதுவும்  வழங்க  வேண்டிய  அவசியமிருக்காது  என  பாண்டான்  எம்பி,  ரபிஸி  ரம்லி  சுட்டிக்காட்டினார்.

“இன்றைய நிலையில்  பெட்ரோலுக்கு வழங்கப்படும்  உதவித்தொகை 14 சென்  மட்டுமே ”, என்றாரவர்.

உலக அளவில்  எண்ணெய்  விலை  குறைந்தும்கூட  அரசாங்கம்  உதவித்தொகையைக்  குறைத்துக்கொள்ள  விரும்பியது.