நகர்புற ஏழைகள் பகுதி-நேர வேலை செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்

poorநகர்புற ஏழைகள், நகரங்களில்  வேலை  செய்து ரிம3,000  அல்லது  குறைவாக  வருமானம்  பெறுவோர்,  வியாபாரம், பகுதி-நேர  வேலை  போன்றவை செய்து  குடும்ப  வருமானத்தைப்  பெருக்கி  வாழ்க்கைத்  தரத்தை  உயர்த்திக்  கொள்ள வேண்டும்.

அப்படிச்  செய்வது நகர்புறங்களில்  உயர்ந்துவரும்  வாழ்க்கைச்  செலவினத்தை  எதிர்கொள்ள  உதவியாக  இருக்கும்  என  மலேசிய  முஸ்லிம்  பயனீட்டாளர்  சங்கத்  தலைவர்  நட்சிம்  ஜொஹன்  கூறினார்.

“நகர்புற ஏழைகள்  பகுதி-நேர  வேலையாக  இரவுநேரச்  சந்தைகளில்  வியாபாரம்  செய்தல், தையல்வேலை  செய்தல்  போன்றவற்றைச்  செய்யலாம்”, என பெர்னாமா  டிவி நிகழ்ச்சி  ஒன்றில்  அவர் கூறினார்.

அவர்கள்  மாத  வருமானத்தையும்  அரசாங்க  உதவியையும்  மட்டுமே  நம்பி  இருக்கக் கூடாது.