பத்துமலை கோயிலை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் கனிமநீர் போத்தலில் ஹலால் சின்னத்திற்கு பக்கத்தில் இந்து தெய்வம் முருகன் படம் பதிக்கப்பட்டிருக்கும் கனிமநீர் போத்தல்கள் நிலையடுக்கிலிருந்து அகற்றப்படும் என்று அந்நீர் தயாரிப்பு நிறுவனம் சுவான் சின் செண்ட். பெர்ஹாட் கூறுகிறது.
மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கம் (பிபிஐஎம்) போட்ட கூப்பாட்டை தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்கோயிலின் முன் அமைந்திருக்கும் பெரிய முருகன் சிலையின் படத்தை அந்த கனிமநீர் போத்தலில் ஒட்டியதில் தீய நோக்கம் எதுவும் கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளது.
அந்த லேபிள் “Visit Malaysia Year 2014” வுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தைக் கொண்டது அந்நிறுவனம் மேலும் கூறியது.
Welcome to Malaysia,Batu caves is not halal ! Thaipusam revenue is… ???
ஹலால் உடைகள்…..?, ஹலால் சாலைகள் ……..???
ஹலால் கழிவறைகள் …….????
புத்தி கேட்ட ஜென்மங்கள். இவ்வளவு முட்டாள்களா? கேடு கேட்ட கீழ்தர ஈன அறிவிலிகள்
எழுருகும் நாம் தெய்வம் என்றல் ஏலகரம்
கோயில் தாண்டவ ராஜா சீனன் கிட்ட எவலொ அடிச்சார் அதையும் சீனன் கிட்ட கேளுங்க ! இனிமேல் கேட்டால் அது அவன் பாடு என்று நடனம் ஆடுவார் …. தண்ணி சொம்மா சிந்தி இருக்காது ஓட்ட இருக்கும் .ஆலால் போட்டால் ஆபத்தா? வெட்டும் ஆடு கோழி தீபாளி எல்லாம் வாந்தியா தாண்டவா? ஆல் சைவம் அதையும் ஆலால் பன்னலாம்.ஓட்ட தான் இடமில்லை? அங்கேயும் தண்ணிதான் காரணம்.
ஹிந்து தெய்வங்களை கண்டால் என் இப்படி பயம் ?
ஹலால் endraal? Rasuah ஹலால்.??????????????
இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு ESSO பெட்ரோல் நிலையத்தில் RM50/= -க்கு எண்ணெய் ஊற்றியதர்க்கு 1 சிறிய அருந்தும் நீர் புட்டியை கொடுத்தனர். அதன் மேல் பள்ளிவாசலும் மற்றும் சில இஸ்லாமிய சுலோகங்கள் அடங்கிய எழுத்துக்களும் அச்சிடப் பட்டிருந்தது!. இதுவும் மற்ற மதத்தினரை சூசகமாக கவர செய்யும் முயற்சியோ? சமயக்கூறுகளை உடையது என்று போலிஸ் ரிப்போர்ட் செய்யலாமா?. அந்த அளவுக்கு எங்களுடைய சமய அறிவு தராதரம் இல்லாமல் இல்லை.
பாவம் பொன் ரங்கன், நல்லாதனே இருந்தார்? இப்படி வாந்தி எடுக்கிறாரே?
ஐயோ விடுங்கப்பா ,இது ஒன்னும் பெரிய பிரச்னை இல்லை !! நாள் காட்டிகளில் அச்சிட்ட சாமி படங்களை வருடன் முடிந்த வுடன் குப்பையிலே போடுறேங்க்கள அதை காட்டிலுமா இது கொடுமை ,,,?
தாய்,தந்தை தெய்வம் சொல்பவர் அவர்கள் இறப்பிற்கு பின் புலு உன்பதற்கே புதைக்கின்றனர்,அதுபோலவே,நாராயண நாராயண.
தேனீ விடுகிறார் ரீல். esso எல்லாம் மூடி இப்போ petron
ஆகி விட்டது,இவர் esso வில் பெட்ரோல் ஊத்தினாராம்.
திரு (mohan ) மோகன் அவர்களுக்கு எனது பராட்டும் நன்றிக்ளும். சரியான உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல, நமது இந்திய பூஜைபொருள்கள் விற்பனையாளர்கள் மட்டும் என்னவாம்.இப்படியான வேலைகளைத்தானே செய்கிறார்கள். அவ்ர்களுடைய ஊதுவர்த்தி, சாம்புராணி, சூடம் போன்றவைகளில் கோயிலில் வைத்து கும்பிடவேண்டிய சாமி படங்கள் கொண்ட ”லேபில்”களைத்தானே ஒட்டுகிறார்கள். உண்மையான பக்தர்களுக்கு இவைகளைப் பார்த்தவுடனே கோபம் பொங்கிக்கொண்டல்லவா வந்திருக்கவேண்டும். ஏன் இந்நாள்வரையில் அவர்களிடமிருந்து ஒரு எதிர்ப்பையும் காணவில்லை. மொத்தத்தில் சீர்தூக்கிப் பார்த்தால் நம்மிடந்தான் கோளாறுகள் நிரம்பி வழிகிறது. பெரிய பெரிய விலையுள்ள கோயில் திருவிழா பத்திரிகைகள் அச்சடித்து ”ரெஸ்டாரெண்டு”களில் கழிவறைகளுக்குப் பக்கத்தில் ஒட்டிவைத்திருந்ததை பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் யார் கேட்பது. மற்றவர்களை மாற்ற முயற்சிப்பதற்கு முன் நாம்தான் மாறவேண்டும்.
Esso நிலையங்களை ஒவ்வொன்றாகத்தான் மாற்றி வருகின்றனர். இன்னும் மாற்றப் படாத இடங்களும் உண்டு என்பதை நம்ப காய் அறியவில்லையோ?
நம்மவர்கள் சூடம்,சாம்பராணி,ஊதுபத்தி இப்போது கனிமநீர் போத்தலில் தெய்வபடம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் முடிந்ததும் தெருவில் வீசுகீரர்கள் காலில் மிதிபடுகிறது தவிர்பது நல்லது.
ஆசாமி வெண்ணே! இன்னும் எல்லாம் ESSO பெட்ரோல் நிலையத்தையும் PETRON ஆக மாற்றவில்லை! கட்டம் கட்டமாகதான் மாட்ரிவருகிரார்கள் இன்னும் சில இடங்களில் ESSO உள்ளது வெண்ணே! எதையும் நல்லா தெரிஞ்சிகிட்டு பேசு! வெண்ணை!
விசிட் மலேசியா (Visit Malaysia) விளம்பரத்திற்காக பத்து மலை முருகனின் படத்தை போட போய் விவகாரமா ஆயிடுச்சு! வர வர நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் எதுவுமே சரியா படல!!! இதுவெல்லாம் எங்கே போய் முடியும்னு தெரியல!!!
அட விடுங்கப்பா,அவர்கள் நமக்கு நல்லது தானே செய்திருக்கிறார்கள் ,எல்லாத்தையும் வெறித்தனமாகவே பாக்காதிங்கப்பா,அந்த தண்ணிப்போத்தலை வாங்கி குடித்துவிட்டு அதை குப்பையிலோ அல்லது ரோட்டிலோ போட்டுவிட்டு போவாங்க அதை நாலு பேரு மிதிச்சுட்டு போவான்,அது தேவையா…..
தமிழ் தெய்வமான முருகனை ஆரியன் திருடி விட்டு, பால
தண்டபாணி என்றும்,ஸ்ரீ சுப்பிரமணியர் என்று பெயர் மாறி இந்து
கடவுளாக மாறி,இப்போ minaral wateril கேவலபடுகிறார்.
தமிழர் தெய்வமான முருகனை, சுப்பிரமணியன் ஆக்கியது யார்?. சுப் + பிரமன் + அணியன் = சுப்பிரமனியன். இதன் சம்ஸ்கிருத அர்த்தம் இவ்வாறு: சுப் என்றால் “அழகிய”, பிரமன் என்றால் வேதத்தில் குறிக்கப் பெற்ற “பிரம்மம்” (பரம்பொருள்), அணியன் என்றால் நெருங்கியவன். பிரம்மத்திற்கு நெருங்கிய அழகன். இப்ப சொல்லுங்கள் சுப்பிரமணியன் தமிழரின் தெய்வமா அல்லது முருகன் தமிழரின் தெய்வமா?. இரண்டுமே ஒன்று என்றால் தமிழரின் தெய்வத்திற்கு இந்திரனின் மகளான தேவயானையை திருமணம் செய்து வைத்தது தமிழனா அல்ல பிராமணனா?.வள்ளிக்குச் சக்களத்தி தேவயானையா, தேவயானைக்குச் சக்களத்தி வள்ளியா?. ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் போட்டு தமிழர்களை குழப்ப வேண்டாம்.
முருகனை தண்டபானியாக்கி அவர்தம் தன் மனைவிகளுடன் இருந்து பிரித்தது யார்?.
சிலறுக்கு மதம் பிடித்துவிட்டதி ஜாக்கிரதை,ப்ராமணர் ஒழுக்கத்தை பேனுபவர்,ஒழுக்கத்தை பழமை யென்று அவமதிப்பவர் நீரே,இது உலகம் அறியும்,ஸ்ரீ ராம்,அம்பிகா தமிழரா,நாராயண நாராயண.
நாராயண நாராயண.
தண்ணிர் போதலில் லேபல் ஒட்டுவது பற்றி ஆரம்பித்து இப்போ எங்கேயோ போய்க்கிட்டுருக்கு ! இப்படித்தான் நாம் அனைவரும் கண்டதெயெல்லம் எழுதி, வள வள பேசியே நன்மை நமே தரம் தாழ்த்தி கொள்கிறோம்.
‘சுப்பிரமணியன்’ என்பது சமஸ்கிருதத்தில் ‘அழகிய பிரம்மத்திர்க்கு நெருங்கியவன்’ என்று திருத்தி படித்துக் கொள்ளுங்கள். சுப்பிரமணியனை இந்து எனப்படும் வைதீக மதத்தினர் ‘கடவுள்’ என்று ஏற்றுக் கொள்வதில்லை. “முருகன்” தமிழரின் “தெய்வம்”.
தேனியின் (6 நவம்பர்) கருத்து அற்புதம்..ஹிந்து என்றால் இளக்காரம் தானா ?கமல்ஹாசன் ஆரம்பம் முதலே ஹிந்து கடவுளையும் சடங்குகளையும் கிண்டலடித்தே வருபவர்..இது தெரிந்தும் நாம் பெரிய மனதுடன் அவரை வாழ விட்டோம்..காரணம்..கோமாளிகள் வயிற்று பிழைப்பு அது.அதில் கை வைப்பது பாவம் என்பது நம் எண்ணம்..ஆனால் இந்த பாட்சா இஸ்லாமியரிடம் பலிக்க வில்லை..முஸ்லிம்களின் தீவிர வாதத்தை ;உண்மையை விஸ்வரூபம் வாயிலாய் சொன்னார் ;கொதித்து எழுந்த முஸ்லிம்கள் கூட்டம் அவரை உண்டு இல்லை என பண்ணியது.”.நான் நாடு விட்டே போகிறேன் “என்று அவர் புலம்பி தீர்த்தார்..அவர் தெளிவாய் இருந்தால் இந்நேரம் நம் மதவாதிகளின் புரிந்திணர்வு புரிந்திருக்கும்..சூடு,சொரணை இருந்தால் இனி அவர் படங்களில் நம்மை கிண்டல் செய்யமாட்டார்..பாப்போம்!
முருகனை ஹிந்து என்று சொல்லாதிர்கள் . முருகன் தமிழர்களின் கடவுள் .
முருகன் தமிழ் கடவுள் அவருக்கு ஹிந்தி தெரியாது . ஐயப்பன் கேரளா மலையாள கடவுள் அவருக்கு தெலுங்கு தெரியாது. வெங்கடசலபதி ஆந்திர தெலுங்கு கடவுள் . அவருக்கு தமிழ் தெரியாது . நன்றி
கோழிக்கோடு சேகர் நீங்கள் சொல்லிய அத்துணை தெய்வத்திற்கும் எந்த மொழி தெரியவில்லை என்றாலும் பரவா இல்லை. சமஸ்கிருதம் மட்டும் தெரிந்தால் போதும்!.
அட வெங்காயங்களா ? உங்கள் மொழி சண்டையில் ஏன்யா கடவுளர்களை வம்புக்கு இழுகிறீர்கள் ? மொழியால் நாம் வேறுபடலாம்..ஆனால் மதத்தால் ஹிந்து என்றே ஒற்றுமையாய் இருந்து தான் தொலைப்போமே ? என்ன கேடு வந்துவிட போகுது?
சண்டாள பாவிகளா! இந்த கர்மாந்திரம் பின்னால் வரும் வாத்து மடையர்களுக்கு தோன்றும் என்றுதானோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருதத்தை ஆலயத்தில் பொது மொழியாக வைத்தார்கள் ?விஷ்ணு வாடா நாட்டு சாமியாம் – முருகன் தமிழர் தெய்வமாம் ! எங்கே அவிங்கே உங்களை தேடி வந்து சொன்னாங்களோ ? போங்கையா நீங்களும் உங்க பொடலங்காய் ஆராய்ச்சியும் !!
ஜாதி சண்டை போய் , சாமி சண்டை , வேலையில்லாத கபோதிகள்.
கமலுக்கு பிச்சை போடுவதாக நினைத்துக்கொண்டு யாரும் அலட்டிக்கொள்ள வேண்டாம். கமல் நல்ல நடிகன்; நல்ல வியாபாரி; நல்ல அறிவாளி; எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான சினிமா கலைஞன். எவரையும் கெஞ்சவில்லை. ஒரு நடிகனாக உழைக்கிறார். அவருடைய கலையை மக்கள் இனம், மொழி, மத பாகுபாடின்றி எல்லோரும் பார்க்கிறார்கள். எவ்வளவோ இஸ்லாமியர்கள் குடும்பமாக கமலின் விஸ்வரூபத்தைப் பார்த்தார்கள். மதவெறியர்கள் அவர் எந்த மதத்தவராக இருந்தாலும் கமலில் வளர்ச்சியைத் தடுத்துவிட இயலாது.
மொழியால் வேறுபடலாம். இங்கே ஒற்றுமை வேண்டாம் காரணம் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்று ஒரு சாரர் கங்கணம் கட்டிக் கொண்டு தங்களை தெலுங்கர் என்றும் மலையாளி என்றும் பிரித்துக் கொண்டு போகலாம். இதனால் பிரிந்து சென்றவர்கள் தனித்தனியே அரசாங்கத்திடம் இருந்து மானியம் பெற்றுக் கொள்ளாலாம். தத்தம் மொழி பேசும் மக்களின் நலம் மட்டும் பேண வேண்டும். தமிழன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்பதுதானே அவரவர் சுயநலம். அப்படியானால், தமிழர் தங்கள் சமயத்தை அறிந்து, உணர்ந்து செயல்படாமல் இருப்பதற்கு “ஹிந்து” என்ற கூட்டணி வேண்டும். ஆரியர் அடிமைகளாக இன்னும் தமிழர் வாழ வேண்டும் எவனுடைய சூழ்ச்சி?. யார், யார் ஆரிய தர்மத்தின் காலடியில் வீழ்த்து தங்களைச் சூத்திரர் என்றும் பஞ்சமர் என்றும் அறிமுகபடுத்தி வாழ விரும்புகின்றீர்களோ வாழுங்கள். அதற்க்கு என் தமிழர்களை பலிகடாவாக்கப் பார்கின்றீர்கள். போதுமடா உங்கள் “ஒற்றுமை” பாசாங்கு. என்னே சுய நலமடா இது?. மேலும், மேலும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க தமிழர்கள் இன்று இளிச்சவாயர்கள் இல்லை. தமிழர்களுக்கு என்று என்றும் உள்ள சமயத்தைப் போற்ற யாரும் தடைகல் போட வேண்டாம். இது கசந்தால் இன்னும் கசாயம் கொடுக்க தயாராக இருக்கின்றேன். மண்டைக்கு மணி அடிக்க வேண்டாம்.
கமல் ஒரு நல்ல நடிகர்
சமஸ்கிருதம் தமிழர் ஆலயத்தில் பொது மொழியாக வைக்கவில்லை கம்மானாட்டிகளா. கருமாந்திரம் பிடித்த பிராமணர் தமிழர்களை ஆலயத்தினுள் விடாமல் தானே கடவுளுக்கு முகவர் என்று சொல்லிக் கொண்டு நம்மை நாம் வணங்கும் இறைவனிடமும், தெய்வத்திடம் அண்ட விடாமல் தமிழ் மொழியால் நமக்குரிய இறைவனையும், தெய்வத்தையும் அருச்சிக்க தடை போட்டனர் என்பைதையாவது அறிந்துக் கொள்ளுங்கள். 1987-ல் வட பாலாறு அருகே பெண்ணை என்ற ஊரில் இருக்கும் வள்ளி மலை திருதலத்தில் முருகனை தரிசிக்க காலை 6.30 மணிக்கு படியேறி மூல ஸ்தானத்திர்க்கு வெளியே காத்திருந்தேன். அத்தலத்தில் எடுபிடி வேலை செய்யும் ஒரு பாமர தமிழ் பையன் வந்து மூல ஸ்தான கதவைத் திறந்து சில பொருளை உள்ளே வைக்கச் சென்றான். எம் பக்கத்தில் தரிசனத்திர்க்காக காத்திருந்த ஒரு தமிழ் பிராமணன், உள்ளே சென்ற காரணத்திற்க்காக அந்த பையனை தாகாத வார்த்தையில் திட்டி அவன் அழுவாத குறையாக அவ்விடத்தை விட்டு நகன்றான். அந்நிகழ்வை இன்று நினைத்தாலும் எம் மனம் பதறுகின்றது. இன்று எமக்கு இருக்கும் சமய அறிவு அன்றிந்திருந்தால் அந்த பிராமணன் குரவலையே பிடித்திருப்பேன். இறைவன் மொழிகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதை நான் அறியாமல் இல்லை. எனினும் எம் இறைவனை, எம் தெய்வத்தை எனக்குத் தெரிந்த மொழியில் வணங்காமல் அயலான் மொழியில் வணங்க வேண்டும் என்று தமிழர்களுக்கு என்ன கேடா?. அல்ல அவ்வாறே இருக்க வேண்டும் என்று பிறர் தமிழருக்குச் சொல்ல பிறருக்கு என்ன கேடு வந்தது?. சீண்ட வேண்டாம். அப்புறம் சீற்றம் தானகவே வரும்.
தேனீ , …………. உளறதே
பழகிபோச்சு எப்படி விடுவது கொலவி,வாழ்க நாராயண நாமம்.
எது எது எந்த இடத்தில் இருக்கணுமோ அது அது அந்த இடத்தில் இருந்தால் தான் மரியாதை. செருப்பு வீட்டுக்கு வெளியே இருக்கனும். தன் வீடுதானே என்று ஒண்ணுக்கும் இரண்டுக்கும் வீட்டு ஹல்லிலே போகமுடியுமா ? பாத்துருமில் சோறு சாப்பிட முடியுமா? முருகன் இல்லாத பத்துமலையா? தாலி இல்லாத கல்யாணமா? நெருப்பு இல்லாத புகையா? அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கணும். கோவில் கருவறைக்குள் அவனவன் இஸ்டத்துக்கு உள்ளே போனால் சாமிக்கு என்ன மரியாதை. இது கூட தெரியாத கல்லுணி தேனீ.
தேனீ ,,உங்களுக்கு சம்ஸ்கிருத அறிவு கிடையாது என்பதால் அந்த செம்மொழியை வெறுப்பானேன் ? கடவுளுக்கு எந்த மொழி புரியும் ?புரியாது என்று உமக்கு எப்படி தெரியும் ? நீர் என்ன திரிகால ஞானியா ?அந்த மொழியையும் கற்றுகொல்லுங்க்களேன் ! என்ன குடி முழுகி போய் விடுகுறது..?இறைவன் அனைவருக்கும் பொது. சில பேர் செய்த தவறை வைத்து ஒட்டு மொத்த பிராமணர்களை பந்தாடுவது..பகுத்தறிவு அல்லவே !
தேனைக் குடித்து விட்டு உளருபவனிடம் உண்மை இருக்கும்.
கமல் நல்ல நடிகன் என்பது வரை சரி..ஆனால் அவன் ரசிகர்களுக்கு தன் தான் தோன்றி தனமான வாழ்க்கையால் தவறான வழியை காட்டுகிறார்..வாணியை மணக்கும் வரையில் ஸ்ரீவித்யா வரையில் பல நடிகைகளுடன் உறவு.-.பிள்ளையை சுமந்த சுருதி அம்மாவுக்கு மரியாதைக்கு ஒரு தாலி..அவரையும் ஒதுக்கி விட்டு தாலியில்லாமல் ஒரு கௌதமி- அதன் பிறகு எவரோ ?” “அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி ”
வள்ளிமலை உச்சியில் இருக்கும் தளம் ஒரு சிறிய குகை போன்ற வடிவம் கொண்ட இடம். அந்த குகை கல்லுக்கு அடியே சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அங்கே ஆகமத்தின் அடிப்படையில் கருவறை அமைக்கப் படவில்லை. அந்த ‘கிரில்’ போன்ற கதவை திறக்க அந்த தளத்தின் அர்ச்சகர் அல்லவா அதனை செய்ய வேண்டும். அதை விட்டு எடுபிடி பையனிடம் சாவியைக் கொடுத்து திறந்து உள்ளே பொருளையும் வை என்று கொடுத்து அனுப்பியதால் அவன் அந்த வேலையைச் செய்தான். அதற்காக அவர் பிறப்பை பழிப்பதா ஒரு பிராமணனுக்கு அழகு?. இதேபோல்தான் ‘நந்தனார்’ (1947-ல் வெளியான தமிழ் படம்) படக் காட்சியில் ஒரு பிராமண முதலாளி தன் தொழிலாளியை எவ்வாறு பிறப்பை பழித்துக் கூறினான் என்று பாருங்கள். அதே காட்சிதான் அன்று பெருமைக்குரிய ஒரு முருகனின் தலத்தில் என் முன் நடந்த காட்சி.
முன் பின் ஒரு பிராமணர் வீட்டிற்கு போனவருக்குத் தெரியும். நீரே உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொண்டு போனாலும் நீ வாசலை மிதிக்கும் முன் உன் தலையில் மஞ்சள் நீரை ஊற்றிக் கழுவி உள்ளே விடுபவன் பிராமணன்!. உனக்குத் தண்ணீர் குடிக்க கொடுக்கும் குவளை உனக்கென்றே வைத்திருக்கப் படும் தனிக் குவளை. இன்னும் மேலே எழுத விடாதீர்கள். படிப்பவர்கள் மனம் பொங்கி எழுவார்கள்.
கற்றவன் பண்டிதனாவான். அது எந்த மொழியாக இருந்தால் என்ன?. ஆனால் நான் வணங்கும் இறைவனுக்கும், தெய்வத்திற்கும் இடையில் தரகராக நிற்கும் ஒருவர் எனக்குத் தெரிந்த மொழியினாலே அருச்சனை செய்தால்தானே எம் இறைவனை எப்படி எல்லாம் போற்றி வழிபட வேண்டும் அல்லது வழிபடுகின்றனர் என்று எனக்கு புரியும். அப்படி புரிந்தால்தானே எம் இறைவன் மீது எமக்கு அன்பு பெருக்கெடுக்கும். அப்படி அல்லாமல் எமக்குப் புரியாத ஜெர்மனி மொழியில் ‘தொந்தி வயிற்றுடைய பிள்ளையாரே’ என்று ஏக வசனத்தில் பிள்ளையார் புகழ் பாடுவதை கேட்பார் யார்?. மதம் மாறிய தமிழர் எனும் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் அவர் அறிந்த தமிழைக் கொண்டு அவர்தம் இறைவனைப் போற்றிப் பாடவில்லையா?, பேசவில்லையா?. அந்த ஞானம் கூட இந்து தருமருக்கு இல்லை என்றால் இங்கே யாம் அறிந்த தமிழில் உரையாட உமக்கென்ன உரிமை இருக்கின்றது?.
தேனீ சொல்வதில் எனக்கு உடன்பாடு.தமிழ் தெய்வங்களை தமிழில் அர்ச்சனை செய்தால் என்ன தவறு.சமஸ்கிருதம் என்ன தேவ மொழியா? தமிழில் ஆண்டவனை வழிபட்டால் ஆண்டவன் ஏற்றுகொள்ளமாட்டானா? தமிழ்கடவுளை புறம் தல்லியவர்கள்தானே இப் பிராமணர்கள். இன்று ‘ஓம்’ என்று எழுதுவதை ஓரங்கட்டிவிட்டார்களே. இது கூடவா நம்கண்ணுக்கு தென்படவில்லை. நாம் எதையும் ஏற்றுக்கொள்வோம் என்பது அவர்களுக்கு தெரியும்.ஆகவே அவர்களும் காயை மெல்ல நகற்துகிறார்கள்.
எவனோ ஓர் ஐயர் ஈங்க்கேயோ ஒருவன் தவறு செய்துவிட்டான் என்பதால் நூற்றாண்டு கடந்தும் இன்னும் அவனது சமூகத்தையே காஞ்சி காய்ச்சி எடுக்கிறோம். அவர்களோ கத்தி கொண்டே இரு என்று ஆசியா- ஐரோப்பா வரையில் திறமை காட்டி -உழைப்பால் உயர்ந்து வெகு தூரம் போய்விட்டனர்..நாம் இன்னும் ஆரியர்-திராவிடம்-சமஸ்கிருதம் என்று பழைய பஞ்சங்கதையே பாடுகின்றோம் .கெட்டிக்காரன் அவனா ? நாமா ?என்ன செய்ய ? நமக்கு வழி காட்டிய தலைவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்…
தேனீ-கடவுளிடம் ஒரு தேங்காய் மூடியை நீட்டி லாபம் பெற நினைக்கும் உங்களை போன்றவர்கள் தான் ஐயர் சொல்லும் மந்திரங்களை பராக்கு பார்த்து கொண்டிருப்பீர்கள்..எல்லாரும் உங்களை போல் அல்ல..நமக்கும் கடவுளுக்கும் அன்பால் “டீல்” இருக்கும் போது,இடையே உள்ள ஒருவர் எந்த மொழியில் மந்திரங்கள் சொன்னால் என்ன ?”நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன்.சந்நிதி ” ஆனால் – நீங்கள் நிம்மதியை ஒவ்வொரு
முறையும் அங்கே தொலைத்து விட்டு வருகிறீர்களே ?பல உலக மொழி பேசும் இஸ்லாமியர்கள் அனைவரும் அரபு மொழியில் மட்டுமே வாசகம் ஓதுகின்றனர்..ஜெர்மன் முஸ்லிம் ஜெர்மன் மொழியிலா அல்கூரான் ஒதுகின்றான் ? சும்மா காமடி பண்ணிக்கிட்டு !!!
ஹிந்துதர்மன் என் கருத்தை ஒத்து உங்க கருத்தும் இருப்பதை நினைத்து சந்தோஷ படுகிறேன் , இதை நான் பல முறை சொல்ல வந்தும் என் கருத்தை பிரசுரிக்க ஆசிரியருக்கு விருப்பம் இல்லை . கடவுளை நாம் இனம் பார்க்க வில்லை , அதை ஆரம்பித்ததே தமிழர்கள் தான் , முருகன் தமிழர்களுக்கு பட்ட போட்டு கொடுத்தது போல பேச்சுக்கு பேச்சு தமிழ் கடவுள் என்று சொல்வது போல தமிழர் அல்லாதவர் அவர்கள் கடவுளை சொல்ல முடியவில்லை , இவர்கள் சொல்ல விடுவதும் இல்லை . பண்டைய காலத்தில் கடவுளை முறையாகவும் ஆசாரமாகவும் வணங்கியதால் விவசாயம் நன்கு இருந்தது , அதனால் நன்றியை தெரிவிக்கும் வகையில் கையில் கிடைக்கும் அணைத்து தானியங்களையும் கடவுளுக்கு அபிஷேகமாக படைத்தனர் , பின்னர் அதையே ஒரு சட்டமாகி அபிசகம் செய்யாவிட்டால் தெய்வ சிலைகளுக்கு நன்மை
யில்லை என்ற நிலையை உருவாக்கி அதன் முலம் பல பலதரப்பட்ட அபிஷேகங்கள் செய்தனர் , மற்றவர்
பார்வைக்கு ஹிந்து கடவுள்கள் சுயலவாதிகளை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர் அதனால் கோவில் இன்று
தா லைவர்கள் கொள்ளை லாபம் பெறுகின்றார் . இன்றைய தேதி வரை எங்கள் விட்டில் உள்ள பெருமாளுக்கும் துர்க்கை அம்மனுக்கும் மஞ்சள் நீர் தவிர வேறு எந்த நீர் கொண்டும் அபிசேகம் செய்ததில்லை , 50 வருட சிலைகளே இனமும் நன்றாக உள்ளதே , நான் கடவுளை முறையாக வணங்குபவர்களை மதிப்பவள் . சோம்பேறிகள் தான் கஷ்டபடாமல் வணங்க நினைபவர்கள் . சீனர்கள் கடவுள்லை அதிகம் வணங்குபவர்கள் அல்ல , அனால் செய்வதை முறையாக செய்வதாலும் பக்தியோடு வணங்குவதாலும் இன்று வரை அவர்களை யாரும் எதிலும் ஜெய் க்க முடியவில்லை . ஹிந்துக்கள் என்ற பெயரில் பாதி பேர் இறந்தவர்களுக்கும் முறையாக எதையும் செய்வதில்லை அதே போல தான் கடவுள் விசயத்திலும் . ஒரு சிலர் நினைப்பது போல கடவுளை இஷ்ட பட்ட மொழியில் அர்ச்சனை செய்வது தப்பு இல்லை என்று நினைக்கலாம் அப்படி செய்பவர்களுக்கு உணர்த்தும் காலமும் வரும் .
தேனீ அண்ணா தயவு செய்து ஒரு முறை தேவாலய திற்குள் நுழைத்து அவர்கள் பரம பிதாவை எப்படி வணங்குகின்றனர் என்று கூர்ந்து பாருங்கள் , அதே போலவே மசூதியிலும் சென்று பாருங்கள் முன்பு நான் சந்தித்த சில சங்கடங்களால் கடவுளை முறையாக வணங்குவதே உந்தமம் என்ற முடிவுக்கு வந்தேன் , கடவுள் பூட்டு என்றால் நாம் உச்சரிக்கும் மந்திரம் தான் சாவி போன்றது , உள்ளே நுழைந்த பின் உங்கள் தாய் மொழியில் எப்படி புலம்பினாலும் அந்த காருனாமுர்திக்கு புரியும் ,
அம்மா மங்கை, நான் இருமுறை எனது நெருங்கிய நண்பர்களின் உறவினர்கள் இறந்து அவர்களின் இறுதி சடங்கில் தேவாலயத்திற்குச் அவர்களுடன் பிராத்தனை பாமாலை பாடி உள்ளேன். அதுவும் தமிழ் மொழியில் இருந்தது. பள்ளிவாசலுக்கு போக வழியில்லை. ஆலயத்திற்குச் சென்று திருமுறைகளை ஓதியே எம்பெருமானை வணங்குவது எம் வழக்கம். அதனால் அர்ச்சகர் எம்மொழியில் ஓதினாலும் எமக்குப் பிரச்சனை இல்லை. காரணம் யாம் அறிந்த மொழியிலேயே எம் இறைவனை பிராத்திக்க எம் மனம் இலகும், அந்த பரம்பொருளுடன் கலந்து இன்பம் பெரும். ஆனால் இந்த ‘மொழியில்’ சொன்னால்தான் அந்த மந்திரத்திற்கு ஆற்றல் வரும் என்று என்னிடம் சாக்கு போக்கு சொல்ல வேண்டாம். சொல்லும் வார்த்தைக்கு ஆற்றல் வர வேண்டும் என்றால் அதை சொல்லும் நாவிற்கு அந்த வலிமை இருக்க வேண்டும். அந்த வலிமை மொழியினால் வருவதல்ல. அதை சொல்லும் நாவின் ஈரத்தால் வருவது என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். தங்கையே எம் வார்த்தைகள் உம்மை வருத்தி இருக்குமானால் மன்னிக்கவும்.