கடந்த மாதம் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்துகொண்ட மாணவர் பேரணிக்கு ஏற்பாடு செய்த எட்டு மாணவர்களை மலாயாப் பல்கலைக்கழகம்(யுஎம்) வெளியேற்றினால் அவர்கள் சிலாங்கூர் கல்விக் கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
“யுஎம் அம்மாணவர்களை நீக்க முடிவு செய்தால், அவர்கள் யுனிவர்சிடி சிலாங்கூர்(யுனிசெல்) அல்லது கோலேஜ் யுனிவர்சிடி இஸ்லாம் சிலாங்கூர் போன்ற கல்விக் கழகங்களில் கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க என்னால் முடிந்ததைச் செய்வேன்”, என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கூறினார்.
யுஎம், இப்போது ‘யுஎம்8’ என்றழைக்கப்படும் அந்த எண்மர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமானால் அப்பல்கலைக்கழகத்தின் பெயர்தான் கெடும் என்று நிக் நஸ்மி கூறினார்.
நடவடிக்கை இல்லையென்றால் இலக்கணம் மாறிவிடும்,நடவடிக்கை அவசியமே வாழ்க நாராயண நாமம்