பெர்சே: ஆர்ப்பாட்டத்தைவிட ஆட்சேபணை தெரிவிப்பதே மேல்

mariaதேர்தல்  தொகுதிகளை  திருத்தி   அமைக்கும்  நடவடிக்கை  நியாயமாக  நடைபெறுவதை வலியுறுத்த  தெரு  ஆர்ப்பாட்டங்களைவிட பரப்புரைகளே  மேலானவை  என்று  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  நினைக்கிறார்.

அரசாங்கமும்  இப்போது  “கெட்டிக்காரத்தனமாக”  ஆர்ப்பாட்டங்கள் நடத்த  இடமளிக்கிறது  ஆனால்,  எழுப்பப்படும்  கோரிக்கைகளைப்  புறக்கணித்து  விடுகிறது.

எனவே, தேவை “புதிய  வழிமுறைகள்”  என்றாரவர்.

“தேர்தல்  தொகுதிகளைத்  திருத்தி  அமைக்கும்  பணி  நியாயமாக  நடைபெறவில்லை  எனத்  தெரிந்தால்  நிறைய  ஆள்களைக்  கொண்டு  மறுப்புத்  தெரிவிக்க வேண்டும்.

“நிறைய  பேர்  மறுப்புத்  தெரிவித்தால்  தேர்தல்  ஆணையம்  மறுபரிசீலனை  செய்யத்தான்  வேண்டியிருக்கும்”, என  மரியா  இன்று  கோலாலும்பூரில்  கூறினார்.

பெர்சே  தேர்தல்  தொகுதி  திருத்தி அமைக்கப்படுவது  தொடர்பில்  அதன்  கோரிக்கைகளை  வலியுறுத்த  தெரு  ஆர்ப்பாட்டம்  செய்ய  வேண்டும்  என்று  கூறப்பட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது  அவர்  இவ்வாறு  சொன்னார்.