பாக் சமட்-டுக்கு அரசாங்க-ஆதரவு தொழுகையுரைகளைக் கேட்டு அலுத்துப் போய்விட்டதாம்

samadதேசிய  இலக்கியவாதி  ஏ.சமட்  சையிட்  வெள்ளிக்கிழமை  தொழுகைக்குத்  தேசிய  பள்ளிவாசலுக்குச்  செல்வதை  நிறுத்தி  விட்டார். அங்கு  அரசாங்க-ஆதரவு  தொழுகையுரைகளைக்  கேட்டுக்  கேட்டு  எரிச்சலடைந்து  விட்டாராம்  அவர்.

பாக்  சமட்  என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  அந்த  இலக்கியவாதி  இப்போதெல்லாம்  அங்கிருந்து  இரண்டு  கிலோமீட்டர்  தள்ளியிருக்கும்  மஸ்ஜித்  இந்தியா-வுக்குத்தான்  செல்கிறார். அங்கு  தொழுகையுரைகள்  தமிழில்  இருப்பது பற்றி  அவர்  கவலைப்படவில்லை.

“அது  புரியாவிட்டாலும்  பரவாயில்லை, கேட்க  சுகமாக  இருக்கிறது. மலாய்  மொழியில்  இருந்தால்(அரசுக்கு  ஆதரவாக  இருப்பதை)  புரிந்துகொள்ள  முடிகிறது. அதனால்  எரிச்சல் உண்டாகிறது”, என்றார்.

நான்கு  மாதங்களாக  பாக்  சமட்  மஸ்ஜித்  இந்தியா  பள்ளிவாசலுக்குத்தான்  போய்க்  கொண்டிருக்கிறார்.