பிடிபிடிஎன் புதியவர்களைத் தண்டிப்பது நியாயமல்ல

ptptnதேசிய  உயர்க்கல்விக் கடன்  நிதி (பிடிபிடிஎன்)-இலிருந்து ஆகக் கடைசியாகக்  கடன்  பெற்றவர்கள்  நிம்மதி  பெருமூச்சு  விட்டுக்  கொண்டிருப்பார்கள்.

ஆனால், அந்நிதியிலிருந்து  இனிமேல்  கடன் பெறப்போகின்றவர்களை  நினைக்கும்போதுதான்  வருத்தமாக  இருக்கிறது. அவர்களுக்கான கடன் தொகைகள்   இம்மாதத்திலிருந்து  குறைக்கப்படுவதுதான்  இதற்குக்  காரணமாகும்.

கடன்  வாங்கியவர்கள்  திருப்பிச்  செலுத்தாததால்  பிடிபிடிஎன் கல்விக் கடன்  நிதி  சுருங்கி  விட்டதைக்  காரணம்காட்டி புதிய  மாணவர்களைத்  தண்டிப்பது  முறையல்ல  என்று  மார்டின்  என்ற  மாணவர்  கூறினார்.

தனியார்  பல்கலைக்கழக  மாணவர்களுக்கான  கடன் தொகையில்  15 விழுக்காடும்  பொதுப் பல்கலைக்கழக  விண்ணப்பத்தாரர்களுக்கான  கடனில்  ஐந்து  விழுக்காடும்  குறைக்கப்படும்  என  பிடிபிடிஎன்  புதன்கிழமை  அறிவித்தது.