சிறப்புப் பேரிடர் குழு, திங்கள்கிழமை கூடி கேமரன் மலையில் நிகழும் வெள்ளப் பெருக்குகள், நிலச்சரிவுகள் பற்றி விவாதிக்கும் எனப் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார்.
அக்கூட்டத்துக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமை தாங்குவார்.
“அக்கூட்டம், வருங்காலத்தில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கும்”, என்றாரவர்.
களைக்கொல்லிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால் மண் அரிப்பு ஏற்படலாம் எனவும் ஷஹிடான் கூறினார்.
“அது தொடர்ந்தால் அடிக்கடி மண் அரிப்பு ஏற்பட்டு நிலம் அமிழ்ந்துபோகலாம். எனவே, பண்ணைகளில் களைக்கொல்லிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதைக் கடுப்படுத்த வேண்டியது அவசியமாகும்”, என்றார்.
விசாரணை நடத்தி மழைமேல் ஒரு கேஸ் போடலாமே