“சர்ச்சைக்குரிய நபர்கள்” உரையாற்றுவதற்காக அதன் வளாகத்திற்கு அழைக்கப்படுவதில் அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிலைநிறுத்திக் கொள்வதற்கு மலாயா பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்றதும் சுயேட்சையானதுமான ஆக்ஸ்பர்ட் யூனியன் போன்ற ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
ஆக்ஸ்பர்ட் யூனியன் மாதிரியை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளால் தோன்றக்கூடிய பாதிப்புகளை சரிக்கட்ட இயலும் என்று த யுனைட்டெட் கிங்டம் மற்றும் எயிரே மலேசியன் சட்ட மாணவர்கள் சங்கம் (கேபியுஎம்) தலைவர் பாங் ஜோ ஃபான் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
மலாயா பல்கலைக்கழக மாணவர்கள் மன்றம் பல்கலைக்கழக வளாகத்தில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் உரையாற்றுவதற்காக செய்திருந்த ஏற்பாடு பற்றியும் அதனை ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை பற்றியும் கருத்துரைக்கையில் இவ்வாறு கூறினார்.
பட்டிமன்றம் என்ற முறையில் ஆக்ஸ்பர்ட் யூனியன் அதன் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரையில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து சுயேட்சையாக இயங்கி வருகிறது என்றாரவர்.
உலகப் புகழ் பெற்ற தலைவர்கள் அழைக்கப்பட்டு அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நீண்ட வரலாறு ஆக்ஸ்பர்ட் யூனியனுக்கு உண்டு என்று பாங் மேலும் கூறினார்.
அதற்கான குளிர்ந்த பருவநிலை அங்கு உள்ளதுபோல் இங்கு இல்லையே..!