மாணவர்கள் கூடுவதைத் தடுக்க இருளை நாடும் இன்னொரு பல்கலைக்கழகம்

 

Sabah university1இன்றிரவு தங்களுடைய பல்கலைக்கழக வளாகத்தில் கூடுவதற்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் அதனைத் தடுப்பதற்கு இன்னொரு பல்கலைக்கழகம், இத்தடவை மலேசியா சாபா பல்கலைக்கழகம் (யுஎம்எஸ்), இருளை அரவணைத்துள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் மின்சார விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

மலாயா பல்கலைக்கழ மாணவர் மன்றத்தின் தலைவர் ஃபஹாமி ஸைநோல் இன்றிரவு கோத்தா கின்னாபாலுவில் யுஎம்எஸ் வளாகத்தில் அப்பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறார். இவருக்கு எதிராக யும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற மின்சார வெட்டு யுஎம்மில் அக்டோபர் 27 இல் நிகழ்ந்தது. அன்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அங்கு உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“இன்றிரவு மணி 9.00 லிருந்து அடுத்த நாள் காலை மணி 8.00 வரையில் மின்சார தடை இருக்கும்” என்ற இந்த மின்சார வெட்டு அறிவிப்பை யுஎம்எஸ் அதன் வலைதளத்தில் பதிவு செய்துள்ளது.