படிக்க ஆர்வமில்லாதவர்களுக்குப் பல்கலைக்கழகங்களில் இடமளிக்காதீர்

tanஒழுங்கு   நடவடிக்கையை  எதிர்நோக்கும்  யுஎம்8  போன்ற  மாணவப்  போராட்டவாதிகள் உள்பட,  பல்கலைக்கழகங்களிலிருந்து  நீக்கப்படும்  மாணவர்களுக்கு இடமளிக்கத்  தயார்  என சிலாங்கூர் அரசு கூறுவது தவறு.

இவ்வாறு  கூறிய  கெராக்கான்  இளைஞர்  தலைவர்  டான்  கெங்  லியாங், பொதுப் பல்கலைக்கழகங்களில்  சொற்ப   இடங்களே  உள்ளன  என்றும்  அவை  படிப்பில்  ஆர்வமுள்ளவர்களுக்கே வழங்கப்பட  வேண்டும்  என்றும்  குறிப்பிட்டார்.

“யுனிசெல்(யுனிவர்சிடி  சிலாங்கூர்)-இல்  தகுதியின்  அடிப்படையில்தான்  மாணவர்கள்  சேர்க்கப்பட  வேண்டும். படிப்பில்  தேர்ச்சி  பெறாதவர்களுக்கும் மற்ற  பல்கலைக்கழகங்களைவிட்டு  வெளியேற்றப்பட்டவர்களுக்கும்  அதில்  சேர  தகுதி  இல்லை.

“தரத்தை  நிலைநிறுத்துங்கள். இது ஒன்றும்  குப்பைத்  தொட்டி  அல்ல”, என்றார்  டான்.