முன்னாள் படைவீரர்கள் இறந்த பின்னரும் ரிம12மில்லியன் ஓய்வூதியம் வழங்கப்பட்டது

auditதற்காப்பு  அமைச்சு,  முன்னாள்  படைவீரர்கள்  இறந்த  பின்னரும்  அவர்களுக்குத்  தொடர்ந்து  ஓய்வூதியம்  வழங்கி  வந்திருக்கிறது. அந்த  வகையில்  அரசாங்கத்துக்கு  ஏற்பட்ட  இழப்பு  சுமார் ரிம12 மில்லியனாகும்.

2011-க்கும்  2013-க்குமிடையில்  காலமான   3,786  முன்னாள்  படைவீரர்களுக்கு  முன்னாள் படைவீரர்  விவகாரத்  துறை  ஓய்வூதியம்  என்ற  வகையில்  ரிம11. 94மில்லியனை  வழங்கியுள்ளது.

பின்னர்  தவறு  கண்டுபிடிக்கப்பட்டு  கொடுத்த  பணத்தை  மீட்பதற்கு  நடவடிக்கை  எடுக்கப்பட்டது. ஆனால்,  இதுவரை  ரிம1.69மில்லியன்  மட்டுமே  திரும்பப்  பெறப்பட்டிருக்கிறது.