மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வேண்டாம்: மருந்தாளுநர்கள் கோரிக்கை

pharmபொருள். சேவை  வரியிலிருந்து மருந்துகளுக்கு விலக்களிக்கப்பட  வேண்டும்  என  மலேசிய  மருந்தாளுநர்   கழகம்(எம்பிஎஸ்)  அரசாங்கத்துக்குக்  கோரிக்கை  விடுத்துள்ளது.

“நோயுற்றிருக்கும்  அல்லது  மருந்து  உட்கொள்ள  வேண்டிய  நிலையில் உள்ள”  ஒருவருக்கு  வரி  விதிக்கப்படுவது  முறையல்ல  என  எம்பிஎஸ்  தலைவர்  நன்சி  ஹோ  ஓர்  அறிக்கையில் கூறினார்.

இதன்  தொடர்பில்  எல்லா  மருந்துகளுக்கும்  ஜிஎஸ்டி- இலிருந்து  விலக்களிக்க வேண்டும்  என்று கேட்டுக்கொள்ளும்  மகஜர்  ஒன்றை  எம்பிஎஸ்  அரசாங்கத்திடம்  கொடுக்கும். அதற்கு  ஆதரவாகக்  கையெழுத்து  திரட்டும்  இயக்கம்  ஒன்றையும்  அது தொடங்கியுள்ளது.

சில  நோய்களுக்கு  சிகிச்சைக்காகவும்  மருந்துகளுக்காகவும்  ஆயிரக்கணக்கில்  செலவிட  வேண்டியுள்ளது  என  நன்சி  கூறினார்.

“மருந்துகளுக்குச்  செலவிடப்படும்  ஒவ்வொரு ரிம10,000-க்கும் ரிம600  வரி  செலுத்த  வேண்டியிருக்கும்.

“நோயுற்றிருப்பதே  வருத்தமான  விசயம். நோயுற்றிருக்கும்போது  பொருளீட்டும்  திறனும்  பாதிக்கப்படுகிறது. இந்நிலையில்  ஆறு  விழுக்காடு  வரியும்  செலுத்த  வேண்டியிருக்கிறது”,  என்றாரவர்.