சங்கப் பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்), பேராக் பிஎன் சட்டமன்ற உறுப்பினர் மனைவியர் நலவளர்ச்சி மன்றத்துக்கு(பைடூரி) நிதி எங்கிருந்து கிடைக்கிறது என்பதை ஆராய வேண்டும் என பேராக் பாஸ் இளைஞர் பகுதி கேட்டுக்கொண்டிருக்கிறது.
அதற்கு மாநில அரசிலிருந்து பணம் செல்கிறதா என்பதை ஆர்ஓஎஸ் ஆய்வு செய்ய வேண்டும். அப்படி இருந்தால் அது தப்பு என பேராக் பாஸ் தலைவர் ராஜா அஹ்மட் இஸ்கந்தர் யாக்கூப் கூறினார்.
“இதுவரை எத்தனை அரசு நிறுவனங்கள் பைடூரிக்கு நிதி வழங்கியுள்ளன”, என்றவர் வினவினார்.
2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பைடூரி அதன் எல்லா நிதி வளங்களையும் மற்ற கணக்குகளுக்கு மாற்றிவிட்டபோதே பேராக் பாஸ் இளைஞர் பகுதி இவ்விவகாரத்தை எழுப்பியதை அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தேர்தலில் வென்ற பக்கத்தான் மாநில அரசுக்கு அந்த நிதி வளங்கள் செல்வதைத் தடுக்கவே அது அவ்வாறு செய்தது என்றாரவர்.
பாஸ் தலைவர்கள் தங்கள் தலையின் உள்ளே உள்ளதை நன்கு பாவித்து இது போன்ற பயனுள்ள, உபயோகமான, மக்களுக்குப் பலன் தரக்கூடிய வற்றைப் பற்றி பேச வேண்டும். அதை விட்டுட்டு எப்பப்பாத்தாலும் மதம்2 என அதையே சுற்றி2 வலம் வருவதாக இருக்கக்கூடாது. பாராட்டுக்கள்.
சரியான கோரிக்கை.. சங்கப் பதிவு இலாகா உடனே கவனிக்க வேண்டும். பேரா மாநில தலைமை அதிகாரி கவனிப்பாரா!!!!!!
நிஜமாகவே ஒரு அந்நியன் – ஒரு இந்தியன் தாத்தா இங்கே இருக்க கூடாதா ???