கோத்தா செந்தோசா டிஏபி சட்டமன்ற உறுப்பினர் சொங் சியாங் ஜென், சரவாக் தோட்டப்புறங்களில் வேலை செய்வதற்கு வங்காள தேசத்திலிருந்து 12,000 தொழிலாளர்கள் தருவிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று மாநில அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதற்காக சரவாக் வரும் இத்தொழிலாளர்கள் உள்ளூர் மக்களுக்குப் போட்டியாக விளங்குவார்கள்”, என்றவர் சொன்னார்.
சரவாக் தோட்டங்களில் வேலைசெய்ய வங்காள தேசத்திலிருந்து 12,000 தொழிலாளர்களைக் கொண்டுவர கூட்டரசு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அண்மையில் மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரயோட் அறிவித்திருந்தார்.
“குடிநுழைவு விவகாரத்தில் சரவாக்கிடம் முழு அதிகாரம் இருக்கிறது. மாநில அரசின் ஒப்புதலின்றி அந்த 12,000 தொழிலாளர்கள் உள்ளே வர முடியாது”, என்று சரவாக் டிஏபி தலைவருமான சொங் கூறினார்.
மாநில ஒப்புதல் இன்றி,யாரும் உள்ளே வர முடியாது என்று
DAP சொன்ன பிறகுதான் தெரியும் இப்படியொரு சட்டம் இருக்கிறது
என்று. எதிர் கட்சி இல்லை என்றால் மக்கள் கேனையன் மாதிரி
இருப்பார்கள்.
தோட்டப்புறங்களில் வேலைசெய்ய பெர்மிட் வைத்திருப்பார்கள், ஆனால் இங்கு வந்தவுடன் சுதந்திரமாக பலவிதமான வியாபாரங்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள், அவர்களை யாரும் தடுக்கப்போவதில்லை.