யுனிவர்சிடி மலாயா (யுஎம்) மாணவர் தலைவர் பாஹ்மி சைனலுக்குக் கொடுக்கப்பட்ட உதவிச் சம்பளத்தைப் பொதுச் சேவைத் துறை(பிஎஸ்டி) மீட்டுக்கொள்ள நேர்ந்தால் அதை அவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார் அம்னோ கல்விப் பிரிவுத் தலைவர் இப்ராகிம் அபு ஷா.
“உதவிச் சம்பளம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் அவர்களின் கல்விக்கு அவர்கள்தான் பொறுப்பு.
“பிஎஸ்டி பாஹ்மிக்குக் கொடுத்த உதவிச் சம்பளத்தை மீட்டுக்கொண்டால் அதை அவர் ஏற்க வேண்டும்; எதிர்க்கக் கூடாது. ஏனென்றால் அதுதான் நியாயம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
யுஎம் மாணவர் தலைவர் கல்விக்கழகங்களில் கூடுதல் சுதந்திரம் கோருவது பற்றிக் கருத்துரைத்த இப்ராகிம் அபு, எல்லா இடங்களிலும் சட்டதிட்டங்கள் உண்டு என்றார். விலங்கினங்கள் வாழுமிடங்களிலும் விதிமுறைகள் உள்ளன என்றார்.
கவசான் பெரூமாஹான் சூராவில் பாங் பயன்படுத்தக்கூடாது ஆனால் நிகழ்கிறதே எப்படி,நாராயண நாராயண.