டிஐ-எம்: 1பெஸ்டாரி நெட் விவகாரத்தில் ஒய்டிஎல்-லுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பீர்

bestariஊழல்  கண்காணிப்பு  அமைப்பான  ட்ரேன்பேரன்சி  இண்டர்நேசனல்  மலேசியா (டிஐ-எம்), 1பெஸ்தாரி  நெட்  என்ற  பெயரில் பள்ளிகளுக்கு  மின் -கல்வித் திட்டச்  சேவை வழங்க  குத்தகை  பெற்றுள்ள  நிறுவனத்துக்கு  எதிராக  சட்ட  நடவடிக்கை  எடுக்குமாறு  அரசாங்கத்தைக்  கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த மின் -கல்வித் திட்டத்தின்  இணைய  சேவையாளரான  ஒய்டிஎல் தொடர்பு நிறுவனம்  “ஒப்பந்தப்படி  நடந்துகொள்ளத்  தவறி  விட்டது”  என்பதைத்  தலைமைக்  கணக்காய்வாளர்  அறிக்கை தெளிவாகவே  காண்பிக்கிறது  என  அதன்  தலைவர்  அக்பார் சத்தார்  கூறினார்..

அந்த  ரிம633 மில்லியன்  திட்டத்தை  ஜூன்  மாதத்துக்குள்   முடித்துக்கொடுத்திருக்க  வேண்டும். அந்தக்  காலவரையறைக்குள்  திட்டத்தை  முடிக்காததே  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்  போதுமான  காரணமாகும்  என்றாரவர்.

மேலும், 70  விழுக்காட்டுப்  பள்ளிகளில்  அது  சரியாகவும்  செயல்படவில்லை.