எல்லா மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி-இலிருந்து விலக்களிக்க இயலாது

subraசுகாதார  அமைச்சர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்,   எல்லா மருந்துகளையும்  பொருள், சேவை  வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட  பொருள்களாக  வகைப்படுத்த  வேண்டும்  என்று  மலேசிய  மருந்தாளுநர்  சங்கம்(எம்பிஎஸ்)  முன்வைத்த  பரிந்துரையை ஏற்கவில்லை.

“அத்தனையையுமா?அது  முடியாது”, என்றவர்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  தெரிவித்தார்.

ஆனாலும்,  அது ஒரு  நீண்டகாலக்  கொள்கை  அல்ல என்றும்  அமைச்சர்  கூறினார்.  எதிர்காலத்தில்  அதில்  மாற்றம் நிகழலாம்.

“மலேசியர்கள்  எல்லாமே  வரி-விலக்கு  பெற  வேண்டும்  என  நினைக்கிறார்கள். அதைச்  செய்ய  முடிந்தால்  பிறகு  ஜிஎஸ்டி  தேவையில்லையே”, என  சுப்ரமணியம்  கூறினார்.

அரசாங்கம்  320  மருந்துகளை  அத்தியாவசியமானவையாகக்  கருதி  வரி  விலக்கு  அளித்திருக்கிறது  என்றாரவர்.