பரிதவிக்கும் 330 மாணவர்கள்: அரசாங்கம் உதவ வேண்டுமென எம்பிகள் கோரிக்கை

johariபினாங்கில்  நிதி நெருக்கடி  காரணமாக  இழுத்துமூடப்பட்ட  ஒரு  மருத்துவக்  கல்லூரி  மாணவர்கள்  330 பேருக்கு  உதவ அரசாங்கம்  உடனடியாக  நடவடிக்கைகள்  எடுக்க  வேண்டும்  என பக்கத்தான்  எம்பிகள்  சிலர்  கேட்டுக்கொண்டிக்கின்றனர்.

மாணவர்கள்  வேறு  பல்கலைக்கழகங்களுக்கு மாறிச் செல்லத்  தயாராக  இருக்கிறார்கள்.

ஆனால், கல்வி  அமைச்சு  இன்னும்  பச்சை  விளக்கு  காண்பிக்கவில்லை  என  கோலா  கெடா  எம்பி  சைட்  அஸ்மான்  கூறினார். இதனால், மருத்துவக்  கல்விக்காக ஏற்கனவே  கடன்  வாங்கியுள்ள  பல  மாணவர்கள்  கல்வியைத்  தொடர  முடியாமல்  தவிக்கிறார்கள்  என்றாரவர்.

பல  மாதங்களாக பணச்  சிக்கலில்  சிக்கியிருந்த  University College of Medical Sciences (ஏயுசிஎம்எஸ்), அக்டோபர் 15-இல்  மூடப்பட்டது. நான்கு  மாதங்களாக  பணியாளர்களுக்கும்  சம்பளப்  பாக்கி.

இப்பிரச்னைக்கு  ஏயுசிஎம்எஸ்-சுக்கு  அங்கீகாரம்  வழங்கிய  அரசாங்கம்தான்  பொறுப்பேற்க வேண்டும்  என பிகேஆர்  சுங்கை  பட்டாணி எம்பி  ஜொஹாரி  அப்துல்(வலம்)  கூறினார்.