பினாங்கு பிஎன் சட்டமன்றத்தைப் புறக்கணித்தது

assemblyபினாங்கில் பத்து  பிஎன்  பிரதிநிதிகள்  மாநிலச் சட்டமன்றக்  கூட்டத்தைப்  புறக்கணித்தார். சுங்கை  புயு  சட்டமன்ற  உறுப்பினர்  பீ  பூன்  போ-மீதுள்ள  ஆத்திரத்தில்  அவர்கள்  அவ்வாறு  செய்தனர்.

மாநில நலவளர்ச்சி, சுற்றுச் சூழல், சமூக  விவகாரக்  குழுத்  தலைவருமான  பீ,  சிறுசிறு  விவகாரங்களைப்  பெரிதுபடுத்தி  மக்களைக்  குழப்பப்  பார்க்கிறாராம்.

சட்டமன்றப்  புறக்கணிப்புப்  பற்றி பினாங்கு  எதிரணித்  தலைவர்  ஜஹாரா  ஹமிட்(பிஎன் -தெலோக் ஆயர்  தாவார்),  உத்துசான்  மலேசியாவிடம்  விளக்கமளித்துள்ளார்.

“செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில்  மாநிலத்தில்  பன்றி  வளர்ப்பிடங்கள்  சுத்தமாக  வைத்துக்கொள்ளப்படுகின்றனவா  என்று  கேட்டேன் . அதற்குப் பதிலளித்த பீ,  நான்  என்னவோ,  சீனர்கள்  அதைச்  சாப்பிடுவதைத்  தடுக்கப்பார்ப்பதாகக்  குற்றஞ்சாட்டினார்

“நான்  அவர்கள்  அந்த விலங்கை  உண்ணும்  உரிமை  பற்றிக்  கேட்கவில்லை, அவற்றின்  வளர்ப்பு இடங்கள் பற்றித்தான்  கேட்டேன்”, என்றவர்  கூறினார்.

சட்டமன்றம்  தவறாகப்  பயன்படுத்தப்பட்டு  மக்களைக்  குழப்புவதற்குப்  பயன்படக்கூடாது  என்பதற்காகத்தான்  பிஎன்  பிரதிநிதிகள்  சட்டமன்றத்தைப்  புறக்கணித்தனர்  என்றாரவர்.