பிடிபிடிஎன்-னும் மற்ற நிதி நிறுவனங்களைப் போன்றதே

ptptnதேசிய  உயர்க் கல்வி  கடனுதவி  நிதி நிறுவனம், பொதுமக்கள்  தன்னையும்  மற்ற  நிதி  நிறுவனங்கள்  போலத்தான்  கருத வேண்டும்  என விரும்புகிறது. அந்த  அடிப்படையில்தான்  அது  கடனைத்  திருப்பிச்  செலுத்தாதவர்களின்  பெயர்களை 2015  ஜனவரி  1-இலிருந்து  மத்திய  கடன் தகவல்  கட்டமைப்பில் (சிசிஆர்ஐஎஸ்) சேர்க்க  முடிவு  செய்துள்ளது.

பிடிபிடிஎன்,  2.1 மில்லியன் பேருக்குக்  கடனளித்துள்ளதாக அதன்  வியூகத்  தொடர்பு  தலைமை  அதிகாரி  மஸ்தூரா  முகம்மட்  காலிட்  கூறினார்.

“பிடிபிடிஎன்-னுக்குக்  கடனளிப்பதுடன்  கொடுத்த  கடனைத்  திரும்பப்  பெறும் பொறுப்பும்  உண்டு. கடன்  திருப்பிச்  செலுத்தப்பட்டால்  மட்டுமே அதைக்  கொண்டு   மற்றவர்களுக்கும்  உதவ  முடியும்”, என்றவர்  ரேடியோ  24 பெர்னாமா-விடம்  தெரிவித்தார்.