சிலாங்கூர் அரசு, கிட்டதட்ட ஓராண்டுக்கு முன்னர் மலேசிய பைபிள் கழக(பிஎஸ்எம்)த்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களைத் திரும்ப ஒப்படைத்துள்ளது.
அவ்விவகாரத்துக்கு “அமைதித் தீர்வு” ஒன்று காணப்பட்டிருப்பதாக டிவிட்டரில் கூறிய சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, பைபிள்களைத் திருப்பிக் கொடுக்கும் நிகழ்வில் தாமும் சிலாங்கூர் சுல்தானும் இருக்கும் படமொன்றையும் பதிவிட்டிருந்தார்.
அந்நிகழ்வு இன்று காலை இஸ்தானா ஆலம் ஷா-வில் நடைபெற்றது.
சிலாங்கூர், சாபா, சரவாக் தேவாலயத் தலைவர்களும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மாதங்கள் பல கடந்து முடிந்து இருந்தாலும் இது ஒரு நற்செய்தியே.. இனத்தையும் மதத்தையும் வைத்து மேலாண்மை குட்டையை வக்கிரமாகக் குழப்பும் வக்கிரமவாதிகளுக்கு இனி சில இரவுகள் கண்டிப்பாக மிக2 நீண்டதாக இருக்கும்.
நாட்டில் அமைதியை நிலைநாட்ட பாடுபட்ட சிலாங்கூர் முதல்வருக்கு எங்களது பாராட்டுகள்.
இது கடவுள் திட்டம்.
சிலாங்கூர் அரசாங்கத்தை வீழ்த்த எப்படி எல்லாம் தொந்தரவு கொடுக்க முடியுமோ அதையெல்லாம் செய்து பார்த்தார்கள். பாட்ஷா பலிக்கவில்லை. இப்ப பிள்ளையை ஆட்டிக் கொண்டிருக்கின்றனர். மீண்டும் பிள்ளையை கில்லும் நேரம் வரும்!.
அஸ்மின் செயல் பாராட்டுக்குறியது,ஆனால் அன்வர் சொல்வானே அஸ்மினுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை என்று,மீண்டம் எம்.பி,கதை ஆரம்பிக்குமே நாராயண நாராயண.
கவனம். ஏதாவது முக்கிய வார்த்தைகள் அதில் இருந்து கழன்று நழுவி விழுந்து உள்ளதா என்று நன்கு உறுதிபடுத்திய பின் கிழக்கு மலேசியாவுக்குக் கொண்டு செல்லுங்கள். 2 வேலையாய் ஆகிவிடப் போவுது. பிறகு அதைக் காணோம் இதைக் காணோம் என்று கத்திக், கதறிக்கொண்டு வந்து புது MB அஸ்மீனைத் தொந்தரவு செய்யாதீர்கள். அவர் ஓய்வு நேரத்தில் சில நேரம் ஓய்வாக மீன் பிடிக்க விடுங்கள். ..
எழுதுல்லாம் சரியாய் இருக்கா செக் பண்ணனும்