தியான் சுவா மீதான தேச நிந்தனைக் குற்றச்சாட்டு தள்ளுபடி

tianபிகேஆர்  உதவித்  தலைவரும்  பத்து  எம்பி-யுமான  தியான்  சுவாமீது  சாபா, லாஹாட்  டத்துவில்  தீவிரவாதிகளின்  ஊடுருவல்  தொடர்பில்  அவர்  தெரிவித்த  கருத்து  தேச  நிந்தனையானது என்று  சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டை  கோலாலும்பூர்  செஷன்ஸ்  நீதிமன்றம்  தள்ளுபடி  செய்தது.

நீதிபதி  நோர்ஷரிடா  ஆவாங்,  அரசுத்  தரப்பு  குற்றச்சாட்டை நிரூபிக்கத்  தவறிவிட்டது  என்று  தீர்ப்பளித்து  தியான்  சுவா-வை  விடுவித்தார்.

லாஹாட்  டத்துவில்  நிகழ்ந்த  தீவிரவாதிகளின்  ஊடுருவல்,  மக்களை  மிரட்டவும்  அவர்களின்  கவனத்தைத்  திசைதிருப்பவும்  அம்னோ-வால்  திட்டமிடப்பட்ட ஒரு  சதித்  திட்டம்  எனக் கூறியதாக  தியான்  சுவா-மீது  குற்றம்  சாட்டப்பட்டிருந்தது.