ஜிஎஸ்டி-யைத் தள்ளிப்போடச் சொல்கிறது பினாங்கு சட்டமன்றம்

gstபினாங்கு  சட்டமன்றம், பொருள்,  சேவை வரியின்  அமலாக்கத்தை  2015  ஏப்ரலுக்கு,  அம்மாநிலம்  ஒரு வளர்ந்த  மாநிலமாக  உருவாகும்வரை  தள்ளி  வைக்க  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்ளும்  தீர்மானம்  ஒன்றை  நிறைவேற்றியுள்ளது.

அந்த  அவசரத்  தீர்மானத்தைக்  கொண்டுவந்த  லீ  காய்  லூன்(பிகேஆர்- மாச்சாங் பூபோக்,  ஜிஎஸ்டி  எழைகளையும்  நடுத்த  வருமானம்  பெறும்  தரப்பினரையும்  சிரமப்படுத்தும்  என்றார்.

அத்தீர்மானம் மீது  பேசிய முகம்மட்  பாரிட்  சாஆட்(பிஎன் -பூலாவ்  பெத்தோங்), பாரிசான்  நேசனல்  அரசாங்கம்  பொறுப்புள்ள  அரசாங்கம்  என்றும் அது  மக்களின்  இப்போதைய  நலன்களையும்  வருங்கால  நலன்களையும்  கருத்தில்  கொண்டிருக்கிறது  என்றும் கூறினார்.

“ஜிஎஸ்டி-யைச் செயல்படுத்த  முடிவு  செய்வதற்குமுன்  பலவற்றையும்  ஆராய்ந்திருக்கிறது. 100-க்கு  மேற்பட்ட  நாடுகளில்  அதை  எப்படிச்  செயல்படுத்துகிறார்கள்  என்பதும் ஆராயப்படுகிறது”, என்றாரவர்.