மலேசியா, கல்விக்காக பில்லியன் கணக்கில் செலவிட்டிருந்தாலும் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி ஹம்சா வருத்தப்படுகிறார்.
குவா மூசாங் எம்பியுமான ரசாலி, மற்ற ஆசியான் நாடுகளைவிடவும் மலேசியா கல்விக்காகக் கூடுதலாக செலவிடுகிறது என்றார். ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் 2011-இல், செலவிட்டதைக் காட்டிலும் மலேசியா கல்விக்காக அதிகம் செலவிட்டிருக்கிறது.
“அவப்பேறாக, கல்விக்காக அதிகம் செலவிட்டும் பயனில்லை. தரத்திலும் ஆக்கத்திறனிலும் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை”, என இன்று காலை மலாக்கா யயாசான் சாஆட் கல்லூரியில் பேசியபோது அவர் கூறினார்.
“மலேசியாவில் சராசரி தொழிலாளரின் ஆக்கத்திறன் மதிப்பு ஆண்டுக்கு ரிம43,952. அதே வேளை அமெரிக்காவில் அது ஆண்டுக்கு ரிம285,558 ஆகவும் ஜப்பானில் ரிம229,568 ஆகவும், ஹாங்காங்கில் ரிம201.485 ஆகவும் உள்ளது”, என்று ரசாலி குறிப்பிட்டார்.
இப்பிரச்னைக்குத் தீர்வாக, தொடக்க, இடைநிலைக் கல்வியில் திறன்வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றாரவர்.
நல்ல வேலை தமிழ் பள்ளியை இவர் மூட சொல்லவில்லை !
இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கின்றது? காகாதிரின் MALAY DILEMMA புத்தகத்தை படித்தால் புரியுமே. பணம் மலாய்க்காரன் களினால் எப்படி வீணடித்தாலும் அது பெரிய விசயமே கிடையாது. எல்லாமே இவன்கள் கையில் இருக்கும் போது யார் கேட்டு என்ன பயன்? தாராளமாக வீணடிக்கலாம் அத்துடன் தங்களின் வங்கி கணக்கிலும் போட்டுக்கொள்ளலாம்.
கிடைக்கும் அனா கிடைக்காது
நாட்டில் சரியான கல்வி அமைச்சர் இல்லாது போனதால் வந்த வினை இது.
தாய்மொழியின் அர்த்தம் தெரியாத சமுகத்துக்கு இதெல்லாம் சொன்னால் புரியாது,நாராயண நாராயண.