பாக் சமட்: மலாய்க்காரர்கள் மிரட்டலுக்கு ஆளாகியிருப்பதாகச் சொல்வதை நிறுத்துவீர்

pakதேசிய  இலக்கியவாதியான  ஏ.சமட்  சைட்,  மலாய்க்காரர்கள்  மிரட்டலுக்கு  ஆளாகியிருப்பதாக  சில  தரப்பினர்  கூறுவதை  மலாய்  சமூகம்  நம்பக்கூடாது  என  அறிவுறுத்தியுள்ளார்.

மலாய்க்காரர்களுக்கு  மிரட்டல்  அதிகரித்து  வருவதாக  பூச்சாண்டி  காட்டப்பட்டாலும்  நாட்டின்  தலைமைத்துவம்  மலாய்க்காரர்  கையில்தான்  இருந்து  வருகிறது. மலாய்க்காரரைப்  பிரதிநிதிப்பதாகக்  கூறிக்கொள்ளும்  கட்சிதான்  ஆட்சி  செய்கிரது  என்றாரவர்.

“பிறகு  எப்படி மலாய்க்காரர்கள்  மிரட்டலுக்கு  ஆளாவார்கள்? ஐம்பதாண்டுகளுக்கு  மேலாக  மலாய்காரர்களே  அதிகாரத்தில் இருக்கும்போது சமயமும் (இஸ்லாம்)  மலாய்க்காரர்களும்  எப்படி  மிரட்டலுக்கு  ஆளாக  முடியும்?

“அப்படியானால், ஐம்பதாண்டுகளாக  அவர்கள் என்ன  செய்து  கொண்டிருந்தார்கள்”,  என  பாக்  சமட்  வினவினார்.

ஐம்பதாண்டுகளுக்கு  மேலாக  உள்ள  தலைமைத்துவத்தால்  மலாய்  சமூகத்துக்குப்  பாதுகாப்பு  அளிக்க  முடியவில்லை  என்றால்  அது  அதிகாரத்தை மற்றவர்களிடம்  ஒப்படைப்பதே  நல்லது  என்றாரவர்.