பல்லின நாடான மலேசியாவுக்கு தேச நிந்தனைச் சட்டம் 1948 தேவைப்படுவதால் அது நிலைநிறுத்தப்பட்ட வேண்டும். அதற்கு மாற்றாக வேறொரு சட்டம் வேண்டாம் என்று இன்னொரு மலாய்க்காரர் உரிமைகளுக்கான அரசு சார்பற்ற அமைப்பான எம்பிஎம் இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் அப்துல் அசிஸ் அப்துல் ரஹ்மான் அச்சட்டம் நாட்டின் பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் தேச ஒற்றுமை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டது என்று கூறினார்.
“சாபா மற்றும் சரவாக் மாநிலங்களை தீவகற்பத்திலிருந்து பிரிப்பது, அவதூறுகள் மற்றும் சமய அவமதிப்புகள் போன்றவை நிச்சயமாக அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும்”, என்று தேச நிந்தனைச் சட்டம் மீதான ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
அச்சட்டத்தை மேலும் வலுப்படுத்த அதற்கு திருத்தங்கள் செய்யலாம். ஆனால், அதற்கு மாற்றாக வேறொன்றை கொண்டு வரக்கூடாது என்றாரவர்.
தேசிய நிந்தனைச் சட்டம் 1948 ஐ அகற்றி விட்டு அதன் இடத்தில் தேசிய நல்லிணக்கச் சட்டம் ஒன்றை கொணரும் நோக்கத்தை அரசாங்கம் முன்னதாக கொண்டிருந்தது.
இச்செய்தியாளர் கூட்டத்தில் எம்பிஎம்மின் ஆலோசகரான போலீஸ் படையின் முன்னாள் தலைவர் முகமட் ஹனிப் ஒமார், எம்பிஎம்மின் நேர்மை பிரிவின் தலைவர் முகமட் ஸாமன் கான் மற்றும் அந்த அமைப்பின் தலைமைச் செயலாளர் டாக்டர் ஹசான் மாட் ஆகியோரும் இருந்தனர்.
வரும் அனா வராது, வந்தாலும் வரும், வராவிட்டால் வராது,
சட்டம் ஒரு இருட்டறை, ஜெநேறேட்டார் போட்டாலும் பல்ப் எரியாது.
ஆமாம் இந்த மட்டி சட்டத்தை வைத்துகொண்டு யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அல்லவா ?
சாதாரணக் குடிமகன் கருத்து சொல்வதும், ஊழலை எதிர்த்து போராடுவதும், அரசின் குறைகளை எடுத்துச் சொல்வதும், பேஸ்புக்கில் கருத்துப் போடுவதும் தேசநிந்தனை என்றால் அந்த சட்டம் நிச்சயம் எங்களுக்கு வேண்டாம். கிளந்தானின் ஹுடுட் சட்டமும் உங்களின் தேசநிந்தனைச் சட்டமும் அடிப்படையில் ஒன்றுதான்.
கிலந்தானில் ஊடுட் சட்டம் அமலுக்கு பி.கே.ஆர்,டி.ஏ.பி,யே காரணம்.இசைந்து மதித்து நடந்திருப்பின் சுமுக சூழல் ஏற்பட்டிறுக்கும்,டுன்,னை திருடியது போன்ற சம்பவமே மூல காரணம்,வாழ்க நாராயண நாமம்.