முஸ்லிம் அல்லாதவர்கள் காரணமின்றி மசூதிகளுக்குச் செல்லக்கூடாது

 

No vist to mosque by non-muslimsஇதர இனங்கள் அல்லது சமயங்கள் சார்ந்த மக்களுக்கு எதிரானத் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்து தரப்பினரும் வழிபாட்டுத்தலங்களின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டும் என்று பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கிர் பஹாரும் கூறுகிறார்.

ஓர் எல்லைக்குள் இஸ்லாம் வேறுபட்ட கலாச்சாரங்கள் மற்றும் சமயங்கள் ஆகியவற்றின் நடைமுறைகளை வரவேற்றாலும், ஒரு மசூதியில் காரணம் ஏதும் இல்லாமல் முஸ்லிம் அல்லாதவர்கள் வந்திருப்பது சரியானதல்ல என்று அவர் கூறினார்.

யூனிவர்சிட்டி உத்தாரா மலேசியா (யுயுஎம்) மாணவர்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் உட்பட, பத்து 15 சிந்தோக் சூராவில் ஒரு கூட்டம் நடத்துவதற்காக கூடியிருந்தது பற்றிய ஒரு நாளிதழின் செய்தி குறித்து கருத்துரைத்த அவர் அது ஒரு வழிபாட்டுதலத்தின் புனிதத்தன்மையை மீறிய செயலாகும் என்றாரவர்.

“சுராவில் கூடியிருந்த முஸ்லிம் அல்லாத மாணவர்கள் முறைப்படி உடையணிந்திராததும், சக முஸ்லிம் மாணவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறாததும் ஏமாற்றமளிக்கிறது”, என்று அவர் கூறினார்,