சிலாங்கூர் இஸ்லாமிய இலாகாவால் கைப்பற்றப்பட்ட பைபிள் நூல்களை, மாநில மந்திரி புசார் ஏற்பாட்டில் சிலாங்கூர் சுல்தான் மீண்டும் சரவாக் கிறிஸ்தவ தேவாலயங்களின் சபையிடம் ஒப்படைத்துள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அருமையான முடிவு. இதனை நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலகமே போற்றுகிறது என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
இதனைக் கண்டு அம்னோ அதன் போக்கைத் திருத்திக் கொள்ள வேண்டும், அதனைச் செய்யத் தவறினால், அது கடுமையான பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று எச்சரித்தார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
கடந்த காலங்களில் மக்களைப் பிரித்தாண்டு, சிலர் அல்லது ஒரு பிரிவினர் அனுபவித்த பயனால், தொடர்ந்து அதே பாணியில் மக்களை மிரட்டித் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். அதன் ஓர் அங்கமே சமய, பைபிள் விவகாரமும், தமிழ், சீனப் பள்ளிகளை மூட அம்னோ மாநாட்டில் விவாதிக்கப் படவுள்ள தீர்மானமும் ஆகும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, சமுக, பொருளாதாரத் தாக்கத்தால், மக்களிடையே, குறிப்பாக மலாய்க்காரர்களிடையே ஏற்பட்டுள்ள வெறுப்பைத் தணிக்க இன, சமய விவகாரங்களுக்கு உயிரூட்ட அம்னோ மேற்கொண்டுவரும் செயலின் ஒரு பகுதியாகவே மலாய்மொழி பைபிள் மற்றும் ”அல்லா” விகாரம். அதனைத் தொடர்ந்து, அடையாளம் தெரிவிக்காத சில தீவிரவாதக் கும்பல்கள் தேவாலயத்தில் வெடிகுண்டு வீசியதும், பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு ஆட்படப் போவதாக வீண் புரளியைக் கிளப்பி விட்டதும், தமிழ், சீனத் தாய்மொழிப் பள்ளிகளின் சட்டபூர்வச் செயல்பாட்டின் மீது கேள்வி எழுப்பும் அம்னோவின் பாணியும் அமைகிறது.
காஜாங் நகர்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று நாட்டைச் சுடுகாடாக்கக்கூடிய மேற்கண்ட உணர்ச்சிகரமான விசயங்கள் குறித்துச் சுல்தான்கள் மாநாட்டில் எடுத்துரைப்பதும், அவர்களின் சம்மதத்துடன், தக்கமுறையில் இது போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களுக்குத் தீர்வுகாண்பதும் ஆகும் என்று இவ்வருட ஆரம்பத்திலேயே கெஅடிலான் அறிக்கை விட்டிருந்தது.
அதற்கு சரியானவராக பக்காத்தான், அன்வார் இப்ராகிம்மை தேர்ந்தெடுத்து, அத்தொகுதியின் வேட்பாளராகவும் அறிவித்தது. ஆனால், குதப்புணர்ச்சி வழக்கின் வழி அந்த முயற்சியை தடுத்தவர்கள், சிலாங்கூரைத் தொடர்ந்து ஒரு பிரச்சனைக்குரிய மாநிலமாக மக்களிடம் எடுத்துக்காட்ட, மாநில நிர்வாகத்தைச் சீர்குலைக்க முயற்சித்தனர். பக்காத்தான் தலைவர்களின் ஆற்றலைக் குறைத்து எடைபோட்டனர்.
ஆனால், இன்று மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக பதவி ஏற்றிருக்கும், முகமது அஸ்மின் அலி தனது திறமையை நிரூபித்துள்ளார். மாநில சுல்தானுக்கு சரியான ஆலோசனை வழங்கி, அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில், மாநில அரசரின் மூலம், கைப்பற்றப்பட்ட பைபிள் நூல்களை, சரவாக் கிறிஸ்தவ தேவாலயங்களின் சபையிடம் ஒப்படைத்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தின் இந்தப் பைபிள் ஒப்படைப்பு மித வாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு இடையே நடக்கும் ஒரு பனியுத்தமல்ல.(cold war). இது ஒரு பிரிவின் அரசியல், பொருளாதாரப் பேராசைக்கு நாட்டையும் மக்களையும் பலியிடத் துடிக்கும் வஞ்சக வலை என்பதனை மக்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் இந்நாட்டில் இரண்டு கட்சி அல்லது இரு அணி முறை அரசாங்க அமைப்பின் பயனை, அதன் பாங்கினை உணர்ந்து கொள்ளக் கிடைத்துள்ள மேலும் ஒரு வாய்ப்பாக இந்தப் பைபிள் ஒப்படைப்பு அமைந்திருக்கிறது.
சிலாங்கூர் அமைதியான மாநிலம். இம்மாநிலத்தின் சுபிட்சமும், முன்னேற்றமும் இங்கு வாழும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக மட்டுமின்றி, இன்றைய சுல்தானின் தந்தையும் முன்னால் சுல்தானுமாகிய மேன்மை தங்கிய சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷாவின் வழிகாட்டலில் அமைந்தது. அதனால் நீண்டகாலமாக மக்கள் இன இணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
மாநில மந்திரி புசார் விவகாரத்திலும், பைபிள் நூல்களைத் திரும்ப ஒப்படைக்க இன்றைய சுல்தான் மாட்சிமை தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்ஷா எடுத்துக்கொண்டுள்ள அணுகுமுறை சிலாங்கூர் சுல்தானின் மேன்மையை மேலும் உயர்த்தி காட்டுகிறது. அவர் தந்தையைப்போல் மாநிலத்தில், மக்கள் சந்தோஷத்தில், நல்வாழ்வில் அதிக அக்கறைக்கொண்டவர் என்பதனை உணர்த்துகிறது.
அதே வேளையில் மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கும் ஓர் அரசியல் இயக்கமாக பக்காத்தான் உருவெடுத்துள்ளதால், அம்னோ நாட்டைச் சுரண்டுபதனையும், இனம், சமய, மொழி, கல்வி, கட்சி என்ற பேதங்களை வளர்ப்பதையும் கைவிட்டு, எதிர்காலத்தில் நாட்டுக்கு ஆக்ககரமான எதிர்க்கட்சியாகவாவது இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
…………… வேதம் ஓதுது
கருவாட்டு மண்டைகளுக்கு வேதமும், நாதமும் தெரியாது.
என்னதான் அம்னோக்காரன் தமிழ்மொழி, கல்வி, சமயத்திற்கு எதிராக செயல்பட்டாலும், சொரனையற்ற ஜென்மங்கள் 5 க்கும்10 க்கும் ஓட்டுப்போடுவதை தடுக்க முடியாது சார்.
இவை கருவாடு இல்லை. முக்காடு
இரண்டு மரமண்டைகளும் என்ன சொல்லுதுங்க ………
நாட்டை சுரன்டக்கூடாது என்றால் அதைவிட அம்னோவிற்கு அரசில் வேறு என்ன வேலை?!
நீங்கள் சொல்வது சரி. சுய , குடும்ப -சுகமான வாழ்வுக்கு நாட்டை சுரண்டும் கூட்டம், இன்று மற்றவர்களின் உரிமையை கீழருக்குது. தேசிய ஒற்றுமை, தாய் மொழி பள்ளிகளால் கெடுதா? சரி விட்டு கொடுப்போம். ஆனால் அரசாங்கம் எல்லாவற்றிலும் காட்டும் பாகுபாடுகளினால் ஒற்றுமை கெடுகிறது என்பதை நிறுபித்தால் அம்னோ அதன் சிறப்பு சழுகைக்கு சாவு மணி அடிக்குமா? அல்லது மக்கள் அவர்களுக்கு சாவு மணி அடிக்க வேண்டுமா?
எல்லாம் கை மீறி போய்விட்டது,ஆணவம் அழியும் காலம் வெகு தூரமில்லை,வாழ்க நாராயண நாமம்.