தீவிரவாதத்தை எதிர்க்கச் சொல்வது போதாது, போராட்டத்துக்கு நஜிப்பே தலைமையேற்க வேண்டும்

kokபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  அவரின்  அமைச்சரவையும்தான்  தீவிரவாதத்துக்கு  எதிரான  போராட்டத்தை  முன்னின்று  நடத்த  வேண்டும்.

தீவிரவாதத்தை  எதிர்ப்பீர்  என  ‘அமைதியாகவுள்ள  பெரும்பான்மையினரை’ உசுப்பி  விடுவது  மட்டும்  போதாது  என்கிறார்  சீபூத்தே  எம்பி  தெரேசா  கொக்.

நாட்டில்  அமைதியாகவுள்ள  பெரும்பான்மை  மக்கள்  சமய தீவிரவாதத்துக்கும் வெறித்தனத்துக்கும்  எதிராகக்  கிளர்ந்தெழ  வேண்டும்  என  பிரதமர்துறை  அமைச்சர்  ஜோசப்  குருப்  நேற்று  வேண்டுகோள்  விடுத்ததை  அடுத்து  கொக்  இவ்வாறு  அறிக்கை  விடுத்திருக்கிறார்.

கடந்த  ஆண்டு  நஜிப்பும்  பன்மயம்  தேவை  என்று  அறிக்கை  விடுத்ததையும்  அவர்  நினைவுறுத்தினார்.

“தீவிரவாதம்,  அது   சமயம்  சார்ந்ததோ, இனம்  சார்ந்ததோ  ஒட்டுமொத்தமாக  நிராகரிக்கப்பட  வேண்டியதே  என்பதை  மலேசியர்கள்  நிச்சயம்  ஒப்புக்கொள்வார்கள்.

“ஆனால், தீவிரவாதத்துக்கு  எதிராகப்  பேசும்  பிரதமரும் அவரின்  அமைச்சரவையும் அதற்கு  எதிரான  போராட்டத்தை  முன்னின்று   நடத்துவதில்லையே. அது  ஏன் என்பதுதான்  பெரும்பாலான  மலேசியர்களுக்குப்  புரியவில்லை”, என கொக்  கூறினார்.