நஸ்ரி: அமைச்சு விவேகனந்தா ஆசிரமத்தை பாரம்பரிய இடமாக அறிவிக்கும்

 

maicciகோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்திருக்கும் விவேகனந்தா ஆசிரமத்தை தேசிய பாரம்பரிய இடமாக அரசு ஏட்டில் பதிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சு மனு செய்யும் என்று சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சர் இன்று அறிவித்தார்.

கடந்த நவம்பர் 12 இல், நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சு ஆகியவற்றுக்கு இந்த நோக்கம் குறித்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது என்று நஸ்ரில் தேவான் ரக்யாட்டில் கூறினார்.

“ஆட்சேபங்கள் ஏதேனும் இல்லையென்றால், அடுத்த ஆண்டு மார்ச் மாத அளவில் அது1pakatan nazri அரசு ஏட்டில் பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம். ஆட்சேபங்கள் இருக்குமானால், நாங்கள் முறையான நடைமுறைகளைப் பற்றுவோம். அது அக்டோபர் வரையில் தொடரலாம்”, என்றாரவர்.

விவேகனந்தா ஆசிரமம் அமைந்திருக்கும் அந்த நிலம் மேம்படுத்தப்படக் கூடாது என்பதில் நஸ்ரி திடமாக இருந்து வருகிறார்.

இந்தப் பிரச்சனையை விரைவாகத் தீர்ப்பதற்கு நஸ்ரி எடுத்துக் கொண்ட முடிவை பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டி வரவேற்றனர்.