நாடாளுமன்றத்தில் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் தவறான தகவல்களைக் கொடுத்ததில் “தீய நோக்கம்” எதுவும் இல்லை என்பதால் அவரை உரிமைகள் மற்றும் சலுகைகள் குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை என மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா கூறினார்.
“துணை அமைச்சரிடம் அப்படிப்பட்ட எண்ணம் கிடையாது என்கிறேன். அச்சம்பவம் நிகழ்ந்தபோது நானும் இருந்தேன். தொடர்ந்து கேள்வி கேட்கப்பட்டதால் பதில் சொல்லும் அவசரத்தில் சிலவற்றை அவர் சொல்லாமல் விட்டிருக்கலாம்”, என பண்டிகார் விளக்கமளித்தார்.
அஹ்மட் மஸ்லான், நவம்பர் 6-இல், 1எம்டிபி-இன் ரிம9.6 பில்லியனுக்கு உத்தரவாதமளிக்கும் அரசாங்கக் கடிதம் எதுவும் இல்லை என மக்களவையில் தெரிவித்தார்.
இரண்டு நாள்களுக்குப் பிறகு தாம் சொன்னது தவறு எனத் திருத்தம் செய்து பத்திரிகை அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.
மாட்டிக்கொண்ட பிறகு தப்பிக்க வேறு வழி இல்லை என்றால் மன்னிப்புதானே கேட்கவேண்டும்!