எரிபொருள் விலை குறையாவிட்டால் டிசம்பர் 31-இல் ஆர்ப்பாட்டம்

fuelஅரசாங்கம்  எரிபொருள்  விலையைக்  குறைக்காவிட்டால்  விலைக்குறைப்பு  கோரி  டிசம்பர்  31-இல்  எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும்  என பிகேஆர்  மருட்டியுள்ளது.

அரசாங்கத்துக்கு  அழுத்தம்  கொடுக்க  ஆர்ப்பாட்டம்தான் சிறந்த  வழி  என  பிகேஆர்  உதவித்  தலைவரும்  தலைமைச்  செயலாளருமான ரபிஸி  ரம்லி  கூறினார்.

உலக  அளவில்  கச்சா  எண்ணைய்  விலை  தொடர்ந்து  வீழ்ச்சி  கண்டு  வருவதற்கு  ஏற்ப  அரசாங்கம்  எரிபொருள்  விலைகளைக்  குறைக்காதிருக்கிறது என்றாரவர்.

“ரோன் 97,  ரோன் 95  ஆகியவற்றின்  விலைகளையும்  டீசல்  எண்ணெயின்  விலையையும்  குறைக்க  வேண்டும்”, என  ரபிஸி  கூறினார்.