பாஸ்: டிஏபி வேண்டுமானால் பக்கத்தானிலிருந்து விலகலாம்

kelபாஸ் கட்சியை பக்கத்தான்  கூட்டணியிலிருந்து   விலக்க  முயற்சி  செய்வதை  விடுத்து  டிஏபி  வேண்டுமானால்  அக்கூட்டணியிலிருந்து  விலகிக்  கொள்ளலாம்  என  கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  நிக்  அமார் அப்துல்லா  கூறினார்.

பாஸ் தலைவர் அப்துல்  ஹாடி  ஆவாங்  பக்கத்தான்  தலைமைத்துவ  மன்றக்  கூட்டங்களில்  கலந்துகொள்வது  அவசியம்  என   டிஏபி  அழுத்தம் கொடுத்து வருவது  பற்றிக்  கருத்துரைத்தபோது நிக்  அமார்  இவ்வாறு  கூறினார்.

அந்த இஸ்லாமியக்  கட்சியை  பக்கத்தானிலிருந்து  வெளியேற்ற  “சிறுசிறு  விவகாரங்களை” எல்லாம்   டிஏபி  வேண்டுமென்றே   பெரிதுபடுத்துவதாக  அவர் கூறினார்  என  உத்துசான்  மலேசியா  செய்தி  கூறுகிறது.

“லிம் குவான்  குவாங்  விலக  நினைக்கிறாரா,  தாராளமாக விலகட்டும். டிஏபி  விலகிக்கொள்ள  விரும்புகிறதா,  விலகித்  தொலையட்டும்.

“ஆனால், பாஸை  பக்கத்தானிலிருந்து  விலகச்  சொல்லாதீர்கள்”, என்றாரவர்.